Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வாய்ப்பு இதுதான்.. கொல்கத்தாவின் தலைக்கு மேல் கத்தி.. சிஎஸ்கேவுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தாண்டு ப்ளே ஆஃப் செல்கிறதா என்பதை நிர்ணயிக்கும் முக்கிய போட்டி இன்று நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஸ்ரேயாஸுக்கு சிக்கல்

ஸ்ரேயாஸுக்கு சிக்கல்

ஏனென்றால் இதுவரை அந்த அணி விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் ஒரு தோல்வி பெற்றால் கூட ப்ளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோய்விடும். எனினும் அதனை செய்வதில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் மிகவும் கோபத்துடன் உள்ளார்.

அணியின் பிரச்சினை என்ன

அணியின் பிரச்சினை என்ன

கொல்கத்தா அணி தனது முதல் 4 போட்டிகளிலேயே மூன்று வெற்றிகளை பெற்றுவிட்டது. ஆனால் அதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணாவை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. பவுலிங்கிலும் உமேஷ் யாதவ் மட்டுமே உதவி வருகிறார். இதனால் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இன்று அவை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட்

சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட்

ஒருவேளை இன்று கொல்கத்தா அணி தோல்வியடைந்துவிட்டால் சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் சென்னை 8வது இடத்திற்கு முன்னேறிவிடும். 6 மற்றும் 7வது இடங்களில் உள்ள டெல்லி, பஞ்சாப் அணிகள் சரியான ஃபார்மில் இல்லை. அவர்கள் அடுத்தடுத்து பெறும் தோல்விகள் சிஎஸ்கே அணி 5வது இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

சென்னை அணி தற்போதைக்கு 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் உள்ளது. இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை பெற்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது சுலபமாகிவிடும். மீதமுள்ள 5 போட்டிகளில் ஆர்சிபி, டெல்லி, ஐதராபாத் அணிகளுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 2, 2022, 21:09 [IST]
Other articles published on May 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+