Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியேறப்போவது யார்? சிஎஸ்கேவை வீழ்த்திய அதே ஃபார்முலா.. ஐதராபாத் அணியை சமாளிக்க ஸ்ரேயாஸ் பலே ஐடியா!

புனே: ஐபிஎல் தொடரில் இருந்து 3வது அணியாக வெளியேறப்போவது எது என்பதை செய்யும் போட்டி இன்று தொடங்கியுள்ளது.

புனேவில் நடைபெறும் 61வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

ஐதராபாத் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. இனியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும். இதே போல கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணி இன்றைய போட்டியில் தோற்றுவிட்டால் தொடரில் இருந்தே வெளியேறிவிடும். எனவே இன்று நிச்சயம் ஏதாவது ஒரு அணி வெளியேறப்போகிறது.

ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

இதற்காக ஐதராபாத் அணி இரு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதாவது காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் ஆகிய இருவரையும் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இவர்களின் காம்பினேஷன் இதற்கு முன்பு நல்ல பலனை கொடுத்துள்ளது.

பழைய பலம்

பழைய பலம்

இதே போல கொல்கத்தா அணி, தான் முதன் முதலில் பயன்படுத்திய ப்ளேயிங் 11-ஐ கொண்டு வந்துள்ளது. அதாவது பேட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக உமேஷ் யாதவ் கொண்டு வரப்பட்டுள்ளார். இதே போல ஷெல்டன் ஜாக்சனுக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளார். இரு அணிகளும் தங்களது பழைய ப்ளேயிங் 11-ஐ களமிறக்கியுள்ளதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

கொல்கத்தா: வெங்கடேஷ் ஐயர், அஜிங்கியா ரகானே, நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி

ஐதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்ஸன், ராகுல் திரிபாதி, எய்டன் மர்க்ரம், நிகோலஸ் பூரண், சஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்

Story first published: Saturday, May 14, 2022, 19:44 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+