Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் தகுதி வேண்டும்.. ஐபிஎல் நடுவர்களை விளாசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.. அப்படி என்ன ஆனது??

மும்பை: ஐபிஎல் நடுவர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

IPL 2022: Kris Srikkanth Slams Umpires on Stoinis Wicket Controversy | OneIndia Tamil

ஆர்சிபி - லக்னோ அணிகள் நேற்று மோதிய போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸால் பெரும் சர்ச்சை வெடித்தது.

நடுவர்கள் எடுத்த ஒரு தவறான முடிவால், ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறிப்போனது.

நடுவரின் தவறு

நடுவரின் தவறு

181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஸ்டோய்னிஸ் மற்றும் ஹோல்டர் இருந்தனர். இதனால் வெற்றி கிடைத்துவிடும் என ரசிகர்கள் நம்பினர். எனினும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

சர்ச்சை முடிவு

சர்ச்சை முடிவு

ஆட்டத்தின் 19வது ஓவரின் முதல் பந்தை ஹாசல் வுட் வைட்டாக வீசினார். லைனுக்கு மிகவும் வெளியே சென்றது. ஆனால் நடுவர் அதற்கு வைட் கொடுக்கவில்லை. இது ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்த பந்தில் வேண்டுமென்றே வைட் லைனில் சென்று நின்றார். இனி இங்கு நின்று ஆடினால் தான் ரன் எடுக்க விடுவார்கள் என்பது போன்று நினைத்துக் கொண்டார்.

அடுத்த பந்தில் ஏமாற்றம்

அடுத்த பந்தில் ஏமாற்றம்

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஹாசல்வுட், பந்தை ஸ்டம்ப் லைனுக்கு வீசி, போல்ட் ஆக்கினார். இதனையடுத்து கோபத்தின் உச்சிற்கே சென்ற ஸ்டோய்னிஸ்,ஸ்டம்ப்பை உடைக்கும் அளவிற்கே சென்றுவிட்டார். இந்த ஒரு விக்கெட்டால் லக்னோ அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. நடுவர்களின் தவறான முடிவு குறித்து ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

இந்நிலையில் இதில் முன்னாள் வீரர் கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த்-ம் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்வீட்டில், ஐபிஎல்-ல் செயல்படும் நடுவர்களுக்கு என்னதான் ஆனது. சிறிய தவறான முடிவுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனை பார்க்கையில் பயமாக உள்ளது. பிசிசிஐ இதில் கண்ணை திறந்து பார்க்க வேண்டும். நடுவர்களாக இருக்க தகுதியான நபர்களை மட்டும் பணியமர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 20, 2022, 15:07 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+