
கூடுதல் பலம்
ஆனால் அதன் பிறகு காயம், ஃபார்ம் அவுட் என்று இருவரும் தங்களது இடத்தை இந்திய அணியில் இழந்தனர். இதனால் நிலையான சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி தவித்து வந்தது. தற்போது ஐபிஎல் சீசன் மூலம் குல்தீப், சாஹ்ல் ஜோடி ஃபார்ம்க்கு திரும்பி வருகிறது. இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

4 ஆட்டநாயகன் விருது
குல்தீப் யாதவ் சீனா மேன் பந்துவீசும் முறையில் செயல்படுபவர். அதாவது, இடதுகையில் லெக் க் ஸ்பின் வீசும் முறை.இது பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளிக்க கூடிய முறையாகும் . தற்போது குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு சீசனில் குல்தீப் யாதவ் 4 முறை ஆட்டநாயகன் விருதை வென்று வருகிறார்.

18 விக்கெட்
மறுபக்கம், சாஹல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கலக்கி வருகிறார். 8 போட்டியில் விளையாடி 18 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். சாஹலின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் எதிரணி வீரர்கள் திணறி வருகின்றனர். இதே போன்று அஸ்வினும், துல்லியமாக பந்தவீசி நெருக்கடி தருகிறார்.

சுழற்பந்துவீச்சு படை
இதனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்திய அணியில் குல்தீப், சாஹ்ல், ஜடேஜா, அஸ்வின் என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதில் 3 பேர் பிளேயிங் லெவனில் இருந்தால், இவர்களை சமாளிப்பதே எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருக்கும். இதனால் இந்திய அணிக்கு நல்ல காலம் காத்து இருக்கு.


Click it and Unblock the Notifications











