ஆத்திரம் அடங்காத குல்தீப் யாதவ்.. மீண்டும் ஒருமுறை சின்னாபின்னமான கொல்கத்தா.. ஐபிஎல்-ல் சுவாரஸ்யம்!!
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் ஆத்திரம் அடங்காமல் பழிதீர்த்து வருகிறார்.
ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கேற்றார் போல பவுலிங்கில் அசத்தி வருகிறது.

தடுமாறிய கொல்கத்தா அணி
தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபிஞ்ச் 3 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 42 ரன்கள் அடித்து டெல்லி அணிக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தார். அந்த சமயத்தில் தான் குல்தீப் யாதவை மீண்டும் வெறியேற்றி அனுப்பினார் ரிஷப் பண்ட்.

குல்தீப்பின் வெறி ஆட்டம்
குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே பாபா இந்திரஜித் 6 ரன்களுக்கும், அதன் பின்னர் வந்த சுனில் நரேன் முதல் பந்திலேயே டக் அவுட்டும் ஆகி வெளியேறினர். 2வது ஓவரிலும் ஸ்ரேயாஸ் ஐயரை 42 ரன்களுக்கும், ஆண்ட்ரே ரஸலை டக் அவுட்டும் ஆக்கி அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார். வெறும் 3 ஓவர்களில் 4 விக்கெட்களை எடுத்தார். எனினும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. மீதமுள்ள ஒரு ஓவரையும் கேட்டுள்ளார். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஏன் இவ்வளவு வெறி
இவ்வளவு வெறிக்கு முக்கிய காரணம் உண்டு. இதற்கு முன்னர் கொல்கத்தா அணியில் விளையாடிய குல்தீப் யாதவ் எந்தவித காரணமும் இன்றி கடந்த 2 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டார். பேட்ஸ்மேன்களுக்கு ஜூஸ் எடுத்துச்செல்வது போன்ற பணிகள் தான் அவருக்கு பெரும்பாலும் வழங்கப்பட்டது. இதனை குல்தீப் யாதவே பகிரங்கமாக தெரிவித்தார். எனவே இந்தாண்டு அதற்கு பழித்தீர்த்து வருகிறார்.

முதல் போட்டியிலும் அசத்தல்
இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் லீக் போட்டியிலும் குல்தீப் யாதவால் தான் கொல்கத்தா அணி சரிந்தது. அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய குல்தீப் யாதவ் 35 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications