Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. சச்சின், கோலி என ஒருசிலர் மட்டுமே செய்த சாதனை.. இன்று சாதித்து காட்டிய குல்தீப் யாதவ்!

மும்பை: இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே படைத்த சாதனையை குல்தீப் யாதவும் படைத்து ஆச்சரியப் படவைத்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஃபார்ம் அவுட்டில் இருந்த
தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் உட்பட பலரும் கம்பேக் தந்துள்ளனர்.

குல்தீப்பின் கலக்கல்

குல்தீப்பின் கலக்கல்

இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வீரராக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொல்கத்தா அணியில் இருந்த அவருக்கு வாய்ப்புகளே தரப்படவில்லை. ஜூஸ் பாட்டில் கொடுக்க மட்டும் தான் சென்றார் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்தாண்டு டெல்லி அணிக்காக களமிறங்கி அடுத்தடுத்து விக்கெட்களை குவித்து வருகிறார்.

தரமான பதிலடி

தரமான பதிலடி

அதுவும் கொல்கத்தா அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் தலா 4 விக்கெட்களை கைப்பற்றி பழித்தீர்த்துக் கொண்டார். நடப்பு தொடரில் இதுவரை வெறும் 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களை அள்ளியுள்ள குல்தீப், அதிக விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் குல்தீப்பின் நண்பர் யுவேந்திர சாஹல் 17 விக்கெட்களுடன் உள்ளார்.

மிகப்பெரும் சாதனை

மிகப்பெரும் சாதனை

இந்நிலையில் ஐபிஎல்-ல் மிகப்பெரிய சாதனையை குல்தீப் படைத்துள்ளார். அவர் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். ஐபிஎல்-ல் ஒரே சீசனில் அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதில் இவரும் இணைந்துள்ளார்.

வீரர்களின் பட்டியல்

வீரர்களின் பட்டியல்

விராட் கோலி - 5 முறை ( 2016 )

குல்தீப் யாதவ் - 4 முறை ( 2022 )

ருதுராஜ் கெயிக்வாட் - 4 முறை ( 2021 )

ரோகித் சர்மா - 4 முறை ( 2016 )

அமித் மிஷ்ரா - 4 முறை ( 2013 )

சச்சின் டெண்டுல்கர் - 4 முறை ( 2010 )

யூசஃப் பதான் - 4 முறை ( 2008 )

மேலும் ஒரு வாய்ப்பு

மேலும் ஒரு வாய்ப்பு

டெல்லி அணிக்கு இன்னும் மீதம் 7 போட்டிகள் உள்ளன. இதிலும் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை வென்றால், ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு வீரரும் படைக்காத பிரமாண்ட சாதனையை அவர் சொந்தமாக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 29, 2022, 17:49 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+