Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம அக்‌ஷர் பட்டேலா இது.. வெற்றியின் நுணி வரை சென்று ஏமாந்த மும்பை.. டெல்லி வரலாற்று வெற்றி!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் போட்டிகள் மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை ஓப்பனிங்

மும்பை ஓப்பனிங்

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஓப்பனிங் ஜோடி ரோகித் சர்மா - இஷான் கிஷான் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். எனினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. குல்தீபின் சுழலில் சிக்கி ரோகித் 41 ரன்களுக்கும் அடுத்து வந்த அல்மோல்ப்ரீத் சிங் 8 ரன்களுக்கும் நடையை கட்டினர்.

இஷானின் தாண்டவம்

இஷானின் தாண்டவம்

இதன் பின்னர் வந்த திலக் வர்ம 22, பொல்லார்ட் 3 ரன்கள் என அதிர்ச்சி கொடுக்க, எதிர்திசையில் நின்றிருந்த இஷான் கிஷான் மும்பை அணியை தாங்கிப்பிடித்தார். 48 பந்துகளை சந்தித்த இஷான் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 81 ரன்களை எடுத்து ஆட்டமிழக்கவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.

டெல்லி அணியின் சொதப்பல்

டெல்லி அணியின் சொதப்பல்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி முதல் 3 ஓவர்களில் 30 ரன்கள் விளாசி ஆச்சரியம் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரம் கூட அது எடுபடவில்லை. முருகன் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் (21), மந்தீப் சிங் டக் அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினர். பொறுப்புடன் ஆட வேண்டிய கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னுக்கு நடையை கட்டினார்.

கடைசி நேர திருப்பம்

கடைசி நேர திருப்பம்

இதன் பின்னர் வந்த வீரர்களில் ரோவ்மன் போவெல் (0), ஷர்துல் தாக்கூர் (22) என சொதப்ப 104 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. டெல்லி அணி அவ்வளவு தான் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் 7 விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லலித் யாதவ் - அக்‌ஷர் பட்டேல் ஜோடி மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அக்‌ஷர் பட்டேல் 17 பந்துகளில் 38 ரன்களும், லலித் யாதவ் 38 பந்துகளில் 48 ரன்களையும் விளாசினர். இதனால் அந்த அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Story first published: Sunday, March 27, 2022, 23:57 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+