ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
மும்பை: ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் ரசிகர்கள் எதிர்பார்ததை விட பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
15வது ஐபிஎல் தொடரில் 65 லீக் போட்டிகளை கடந்து தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் தலா 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. மீதம் ஒருபோட்டி தான் உள்ளது.
இதுவரை குஜராத் அணி மட்டும் 13 போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துவிட்டன.

ப்ளே ஆஃப் சுற்று
இன்னும் லீக் சுற்றில் 5 போட்டிகளே எஞ்சியுள்ள போதும், மற்ற 3 இடங்களை பிடிக்கப்போகும் அணிகள் எதுவென்பது இன்னும் உறுதியாகவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் லக்னோ அணி 16 புள்ளிகளுடன் ( ரன்ரேட் அடிப்படையில் ) 3வது இடத்திலும் உள்ளன. மீதமுள்ள ஒரு போட்டியை வைத்து தான் 2 மற்றும் 3வது இடங்கள் உறுதி செய்யப்படும்.

4வது இடத்திற்கான மோதல்
இதற்கு அடுத்தபடியாக 4வது இடத்திற்கு மட்டும் 5 அணிகள் கடுமையான போட்டி போட்டு வருகின்றன. தற்போது வரை டெல்லி அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து வருகிறது. ஆர்சிபி அணியும் 14 புள்ளிகளுடனும் ரன்ரேட் அடிப்படையில் 5வது இடத்தில் இருந்து வருகிறது. இந்த இரு அணிகளுமே மீதமுள்ள ஒருபோட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும். இரண்டு அணிகளுமே வென்றுவிட்டால் ரன்ரேட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

நம்பிக்கையுடன் 3 அணிகள்
ஒருவேளை டெல்லி, ஆர்சிபி அணிகள் தோற்றுவிட்டால், அந்த இடத்தை நிரப்ப 3 அணிகள் போட்டிக்கு உள்ளன. கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் ஆகிய 3 அணிகளும் 12 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகள் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் 14 புள்ளிகள் ஆகிவிடும். அதில் ரன்ரேட் அடிப்படையில் உள்ளே நுழைந்துவிடும். எனினும் ரன்ரேட்டிலும் டெல்லி, ஆர்சிபி தான் தற்போதைக்கு முன்னிலையில் உள்ளன.
Recommended Video

மீதமுள்ள போட்டி விவரங்கள்
- கொல்கத்தா vs லக்னோ
- ஆர்சிபி vs குஜராத்
- ராஜஸ்தான் vs சிஎஸ்கே
- மும்பை vs டெல்லி
- பஞ்சாப் vs ஐதராபாத்


Click it and Unblock the Notifications