Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம குஜராத் அணியா இது.. பஞ்சாப் அணிக்கு எதிராக படு தோல்வி.. பேட்டிங்கில் வச்சு செய்த லிவிங்ஸ்டன்!

மும்பை: யாராலும் அசைக்க முடியாமல் இருந்த குஜராத் அணியை படுதோல்வியை சந்திக்க வைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

48வது லீக் ஆட்டமான இந்த மோதலில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

2வது பேட்டிங் செய்யும் அணி தான் அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிந்தும் ரிஸ்க் எடுத்தார். அதற்கேற்ற விணையும் வந்தது.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

தொடக்க வீரர் சுப்மன் கில் 9 ரன்களுக்கும் விருதிமான் சாஹா 21 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். சீனியர் வீரர்களான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னுக்கும், டேவிட் மில்லர் 11 ரன்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினர்.

மிக குறைந்த இலக்கு

மிக குறைந்த இலக்கு

கடந்த சில போட்டிகளில் வெற்றிக்கு காரண்மாக இருந்த ரஷித் கான் டக் அவுட்டும், தேவட்டியா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர். இளம் வீரர் சாய் சுதர்சன் மட்டும் ஒற்றையாளாக போராடினார். ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது.

அட்டகாச பார்ட்னர்ஷிப்

அட்டகாச பார்ட்னர்ஷிப்

சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பேர்ஸ்டோ ஒரு ரன்னிற்கு நடையை கட்டினர். எனினும் மற்ற வீரர்கள் கைவிடவில்லை. ஷிகர் தவான் - பனுக்கா ராஜபக்ச ஜோடி சீரான வேகத்தில் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இனி மெதுவாக ரன் அடித்தால் கூட வென்றுவிடலாம் என்ற கட்டத்தில் பனுக்கா ராஜபக்ச 40 ரன்களுக்கு வெளியேறினார்.

Recommended Video

GT vs RCB : Rahul Tewatia Fires Gujarat Titans To Victory | Oneindia Tamil
லிவிங்ஸ்டனின் ருத்ரதாண்டவம்

லிவிங்ஸ்டனின் ருத்ரதாண்டவம்

ஆனால் அதனை மாற்றி அமைத்தார் லியாம் லிவிங்ஸ்டன். வெறும் 10 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களை விளாசித்தள்ளினார். இதனால் 16 ஓவர்களில் பஞ்சாப் அணி 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மறுமுணையில் கடைசி வரை நின்ற ஷிகர் தவான் 53 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் ரேஸில் மற்ற அணிகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.

Story first published: Tuesday, May 3, 2022, 23:33 [IST]
Other articles published on May 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+