Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லிவிங்ஸ்டனின் காட்டுத்தனமான சிக்சர்.. எவ்வளவு தூரம் தெரியுமா.. ஆச்சரியத்தில் வாயைப்பிளந்த வீரர்கள்!

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் அடித்த சிக்ஸர் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

48வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 16 ஓவர்களிலேயே 145/2 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

எப்படி வென்றது

எப்படி வென்றது

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அடித்தளம் போட்டவர் ஷிகர் தவான் தான். ஓப்பனிங்கில் அவர் 53 பந்துகளில் 62 ரன்களை குவித்தது அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றது. இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த பனுக்கா ராஜபக்ச 28 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதனால் கடைசி 30 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டது. எப்படியும் வென்றுவிடுவார்கள் என ரசிகர்கள் கிளம்பத்தொடங்கினர்.

சிக்ஸர்கள் பறந்த ஓவர்

சிக்ஸர்கள் பறந்த ஓவர்

அப்போது தனது பேட்டிங்கால் கட்டிவைத்தார் லிவிங்ஸ்டன். முகமது ஷமி வீசிய 16வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு, ஆட்டத்தை முடித்தார். அனுபவ பவுலரான ஷமியின் அந்த ஓவரில் 6, 6,6, 4,2,4 என மொத்தமாக 28 ரன்களை லிவிங்ஸ்டன் விளாசினார்.

மான்ஸ்டர் சிக்ஸர்

மான்ஸ்டர் சிக்ஸர்

இந்நிலையில் அதில் ஒரு சிக்ஸர் மட்டும் ஸ்பெஷலான ஒன்றாகும். முதல் பந்தை ஷமி லெந்த் பந்தாக வீச, சற்று உடலை பின் தள்ளி கிடாசினார். அதிவேகமாக சென்ற அந்த பந்து 117 மீ தூரத்திற்கு மைதானத்தின் டாப் சுவரின் மீது விழுந்தது. இதனை பார்த்த ஷமி, ஆச்சரியத்தில் வாயைப்பிழந்தார். வர்ணனையாளர்களும் புகழ்ந்து தள்ளினர். இப்படியாக மொத்தமாக வெறும் 10 பந்துகளை மட்டுமே சந்தித்த லிவிங்ஸ்டன் 30 ரன்களை விளாசினார்.

நீண்ட சிக்ஸர்களின் பட்டியல்

நீண்ட சிக்ஸர்களின் பட்டியல்

ஐபிஎல் வரலாற்றில் நீண்ட தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர்களை பார்க்கலாம்.

125மீ - ஆல்பி மார்க்கெல்

124 மீ - பிரவீன் குமார்

122 மீ - ஆடம் கில்கிறிஸ்ட்

120மீ - ராபின் உத்தப்பா

119 மீ - கிறிஸ் கெயில்

119 மீ - யுவ்ராஜ் சிங்

119 மீ - ராஸ் டெய்லர்

117 மீ - லியாம் லிவிங்ஸ்டன்

ஐபிஎல் 2022 சிக்ஸர்

ஐபிஎல் 2022 சிக்ஸர்

117 மீ - லியாம் லிவிங்ஸ்டன்

114 மீ - டேவால்ட் பிரேவிஸ்

112 மீ - டேவால்ட் பிரேவிஸ்

108 மீ - லியாம் லிவிங்ஸ்டன்

107 மீ - ஜாஸ் பட்லர்

106 மீ - லியாம் லிவிங்ஸ்டன்

Story first published: Wednesday, May 4, 2022, 15:55 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+