Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2022 - சிஎஸ்கே வில் ருத்துராஜ்க்கு ஜோடி யார்..? அனுபவ வீரர்களை எங்கு களமிறங்குவது?

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் தீவி ரபயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், ருத்துராஜ் காயத்திலிருந்து குணமடைந்து நிலையில், அவர் முதல் போட்டியில் பங்கேற்பார் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது. இதனால் ருத்துராஜ்க்கு ஜோடியாக களமிறங்க யாருக்கு வாய்ப்பு என்று தற்போது காணலாம்

டிவோன் கான்வே

டிவோன் கான்வே

டுபிளஸில் இல்லாததால் அந்த இடத்துக்கு தற்போது நியூசிலாந்து வீரர் கான்வே வந்துள்ளார். கான்வே அதிடியாக விளையாடக் கூடிய வீரர். இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், இவருக்கு தாக் கூடுதல் சாதகம். கான்வே 20 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 602 ரன்கள் அடித்துள்ளார். சராசரியாக 50 ஐ வைத்துள்ளார். இதனால் இவர் தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

இந்த நிலையில், தீபக் சாஹ்ர் இல்லாததால், பந்துவீச்சில் சிஎஸ்கே 2 வேகப்பந்துவீச்சாளர்களை சேர்க்க வாய்ப்புள்ளத அப்படி இருடநதால் கான்வே அவரது இடத்தை விட வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் அந்த இடத்துக்கு உத்தப்பா தான் முதல் சாய்ஸ். உத்தப்பா கடந்த முறை அதிரடியாக விளையாடினார்.இதனால் அவருக்கு ஓபனிங் வாய்ப்பு வழங்கி தோனி அழகு பார்க்கலாம்.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

அடுத்த இடத்தில் இருக்கும் வீரர் அனைவரும் அறிந்ததே. சென்னை அணிக்காக ஓபனிங் அல்லது நடுவரிசை என எந்த இடத்தில் களமிறக்கினாலும் கலக்கும் வீரர் அம்பத்தி ராயுடு. இதனால் தேவைப்படும் பட்சத்தில் அம்பத்தி ராயுடுவையும் தோனி தொடக்க வீரராக களமிறக்கலாம்.

சேனாபதி

சேனாபதி

அடுத்த இடத்தில் இருப்பவர் சேனாபதி. ஓடிசாவை சேர்ந்த இவர், ருத்துராஜை போல் விளையாடக் கூடியவர். இவரை சிஎஸ்கே அணியே தனிப்பட்ட முறையில் சேனாபதியை அழைத்து, அவரது திறமையை ஆய்வு செடயது பின்னர் ஏலத்தில் தட்டி தூக்கியது. இதே போல் தமிழக வீரர்கள் ஹரி நிசாந்த், ஜெகதீசன் ஆகியோருக்கும் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, March 20, 2022, 20:19 [IST]
Other articles published on Mar 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+