சிஎஸ்கேவிலிருந்து கழற்றிவிடப்படும் 3 வீரர்கள்.. அடுத்த சீசனில் வாய்ப்பு கிடையாது.. காரணம் என்ன?
மும்பை: நடப்பு சாம்பியனாக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் தொடரிலிருந்து வெளியேறியது.
இதனால் சிஎஸ்கே அணி, அடுத்த ஆண்டிற்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் தற்போதே இறங்கிவிட்டது.
இந்த நிலையில், நடப்பு சீசனில் களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள் அடுத்த ஆண்டு விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் என்று தற்போது காணலாம்.

கிறிஸ் ஜார்டன்
ஐபிஎல் மெகா ஏலத்தில் கிறிஸ் ஜார்டனை 3 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. நடப்பு சீசனில் 4 போட்டியில் விளையாடினாலும், சிஎஸ்கே காலம் முழுவதும் பயப்படும் வகையில் சில சம்பவங்களை ஜார்டன் செய்துவிட்டார். வெறும் 2 விக்கெட்டை வீழ்த்திய ஜார்டன், 10க்கு மேல் எக்னாமியை வைத்துள்ளார்.

துஷார் தேஷ்பாண்டே
டெல்லி அணியில் விளையாடிய தேஷ்பாண்டேவை சிஎஸ்கே 20 லட்சம் ரூபாய்க்கு தட்டி தூக்கியது. முகேஷ் சௌத்ரிக்கு முன் தேஷ்பாண்டேக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், 2 போட்டியில் மட்டுமே விளையாடி 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். அதன் பிறகு தோனி தேஷ்பாண்டேக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் அடுத்த சீசனில் தேஷ்பாண்டே சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார்.

ராபின் உத்தப்பா
37 வயதான ராபின் உத்தப்பா,நடப்பு சீசனில் 12 போட்டியில் விளையாடி 2 அரைசதம் உள்பட 230 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மற்ற போட்டியில் சொதப்பியதால், சென்னை அணியின் பேட்டிங்கே கொஞ்சம் தடுமாறியது. இதனால் ராபின் உத்தப்பா, அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது சந்தேகமே.
Recommended Video

பிரிட்டோரியஸ்
தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ், சென்னை அணிக்கு வந்ததுமே பெரும் எதிர்பார்ப்பு எற்பட்டது. முதல் போட்டியில் விளையாடிய பிறகு, சில போட்டியில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. மீண்டும் அணிக்கு திரும்பினாலும் எதிர்பார்த்த செயல்பாட்டை அவர் தரவில்லை. இதனால் 6 போட்டியில் விளையாடி 44 ரன்கள் மட்டுமே அடித்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் பிரிட்டோரியஸ் அடுத்த சீசனில் விளையாடுவது சந்தேகமே.


Click it and Unblock the Notifications