Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ஹோட்டலா இல்ல சொர்க்கமா? ஐபிஎல் வீரர்களுக்கு இவ்வளவு வசதியா? பலே ஏற்பாடு செய்த அணிகள்.

மும்பை: ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றும் பிரமாண்டமான முறையில் ஹோட்டல்களை புக் செய்துக்கொடுத்துள்ளன.

15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் கூடுதல் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

ப்ளே ஆஃப் போட்டிகள் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் பயோ பபுள் பாதுகாப்புடன் கூடிய பிரமாண்ட ஹோட்டல்களை புக் செய்து தங்கியுள்ளன. அவற்றின் விவரங்களை இங்கு பார்ப்போம்.

மும்பை அணி

மும்பை அணி

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள ட்ரிடெண்ட் ஹோட்டலை முழுவதுமாக புக் செய்து தங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த ஹோட்டலில் இல்லாத வசதிகளே இல்லை. மும்பையின் வர்த்தக பகுதியாக பார்க்கப்படும் பாண்ட்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ளது. இதில் கடற்கரை காட்சிகளை காண முடியாது. ஆனால் விமான நிலையம், ஷாப்பின் மால், சுற்றுலா பகுதிகள் மிக அருகில் உள்ளன. மேலும் ஹோட்டலில் ஸ்பா, ஜிம், மற்ற பொழுதுபோக்கு வசதிகள் அனைத்துமே உள்ளன.

கேகேஆர் அணி

கேகேஆர் அணி

மும்பையின் 360 டிகிரி காட்சியை கொடுக்கும் ஐடிசி கிராண்ட் செண்ட்ரல் ஹோட்டலில் கொல்கத்தா அணி தங்கியுள்ளது. மும்பையின் முக்கிய பகுதியான பாபாசாஹெப் அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து மும்பை கடல் பகுதியின் அட்டகாசமான காட்சியை பார்க்கலாம். கடலுக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு ஏற்பாடுகளும் வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

இந்தியாவில் பல இடங்களில் புகழ்பெற்ற ரெனாய்ஸன்ஸ் ஹோட்டலில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ளனர். சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து வெறும் 4 கிமீ தூரத்தில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த வசதிகளாக அவுட்டூர் பூல், ஸ்பா, ஜிம் ஆகியவை அமைந்துள்ளன. மேலும் இங்கு சலூன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சன் குழுமத்திற்கு சொந்தமான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த முறை அந்தேரியில் உள்ள ஐடிசி மாராதா ஹோட்டலில் தங்கியுள்ளனர். இங்கிருந்து மும்பை விமான நிலையம் வெறும் 1.1 கிலோ மீட்டர் தான். உள்நாட்டு விமான நிலையம் வெறும் 3.1 கிமீ தான். பொதுவான அனைத்து விஷயங்களும் இந்த ஹோட்டலில் இருந்தாலும், இங்கு வழங்கப்படும் சாக்லேட் மிகவும் பிரபலமானது. இதனால் அணி வீரர்கள் பல வகையான சாக்லேட்களை ருசிக்கவிருக்கிறார்கள்.

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

விராட் கோலி விளையாடும் ஆர்சிபி அணி தாஜ் லேண்ட்ஸ் ஹோட்டலில் தங்கவுள்ளனர். இது மும்பையின் "குடியிருப்பு பகுதிகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. இங்கிருந்து அரபிக் கடல் வெறும் 200 மீட்டர்கள் மட்டுமே. இதனால் அட்டகாசமான காட்சிகள் கிடைக்கும். மேலும் இந்த ஹோட்டலில் பல வசதிகள் கிடைத்தாலும், மிகச்சிறப்பான யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனல போட்டிக்கு செல்வதற்கு முன்பாக வீரர்கள் மன அமைதியுடன் செல்வார்கள்.

 ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உலகின் மிகப்பிரபலமான ஹோட்டல் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்தியா தவிர்த்து துபாய், ஹாங்காங் ஆகிய இடங்களிலும் உள்ளன. இங்கிருந்து விமான நிலையங்கள் மிகக்குறைந்த தூரத்தில் உள்ளன. மேலும் உங்குள்ள ஸ்பா மற்றும் ஜிம் வசதிகள் வீரர்கள் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். இந்த காரணத்திற்காகவே இந்த ஹோட்டல் புக் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவும், மும்பை அணி தங்கியுள்ள ட்ரிடெண்ட் ஹோட்டலில் தான் தங்கியுள்ளனர். ஆனால் இது நாரிமான் பாய்ண்ட் கிளையாகும். சிஎஸ்கே பழையதை மிகவும் விரும்பும். அந்தவகையில் ட்ரிடெண்ட் ஹோட்டல் பல நகரங்களில் இருந்தாலும், இதுதான் மிகவும் பழமையானது. இங்கிருந்து கடல் காட்சிகள் அவ்வளவு அழகாக தெரியும். எந்த ஹோட்டலிலும் இல்லாத வகையில் மீட்டிங் அறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் 35வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இது வீரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தாஜ் பேலஸை தான் டெல்லி அணி புக் செய்துள்ளது. இந்தியா கேட்டிற்கு அருகிலே உள்ளது இந்த 5 ஸ்டார் ஹோட்டல். ஹோட்டலுக்கு எதிரேயே ரம்மியமான அரபுக் கடல், வான்கடே மைதானத்திற்கு வெறும் 21 நிமிட பயணம் தான் என பல நல்ல விஷயங்கள் உள்ளன. இது வீரர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ஹோட்டல் தாஜ் விவாண்டாவை புக் செய்துள்ளது. இது மும்பை நகரத்தில் இருந்து சற்று தள்ளி இருந்தாலும், மிகவும் சிறப்பான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல சுற்றுலாத்தளங்கள் இந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ளன. அவை ஹோட்டல் ஜன்னல்களில் இருந்துக்கூட பார்க்கலாம். எனினும் இது மிகவும் பிரமாண்டமான ஹோட்டலாகும்.

குஜாராத் டைட்டான்ஸ்

குஜாராத் டைட்டான்ஸ்

குஜராத் அணியானது, ஜே டபள்யூ மாரியட் ஹோட்டலை புக் செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் பண்நாட்டு விமான நிலையங்களுக்கு மிகவும் அருகில் உள்ளது. மும்பையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் இங்கிருந்து மிக அருகில் ஆகும். பிசினஸ் மீட்டிங், அணி ஆலோசனைகள் என பலவற்றையும் நடத்திக்கொள்ள இந்த 5 ஸ்டார் ஹோட்டல் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளது. மேற்கூறிய அனைத்து ஹோட்டல்களின் வாடகைகளும் பல கோடிகளில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, March 14, 2022, 10:52 [IST]
Other articles published on Mar 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+