Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடரும் தோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி.. கேஎல் ராகுலின் கேப்டன்சி சொதப்பல்..எங்கே தவறு நடந்தது?

மும்பை: இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்ற லிஸ்டில் தற்போது முதலில் இருக்கும் இளம் வீரர் கேஎல் ராகுல். ஏற்கனவே இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் யார் சிறந்த கேப்டனாக செயல்படுகிறார்களோ அவர்களை தான் அடுத்த இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி கூறி இருந்தார்.

இப்படி பார்த்தால் இந்த ஜென்மத்தில் இல்ல ஏழு, ஏழு ஜென்மத்திலும் கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பு ஏற்க தகுதியே இல்லாத நபராக தான் இருப்பார்.

தப்பித்த பஞ்சாப்

தப்பித்த பஞ்சாப்

பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கும் போதே, அந்த அணி 200 ரன்கள் மேல் அடித்தாலும் தொடர்ந்து தோற்கும். அதற்கு காரணம் ராகுலின் கேப்டன்சி தான் என்ற குற்றச்சாட்டு இருந்தது. தற்போது பஞ்சாப் அணிக்கு மாயங் அகர்வால் கேப்டனாக ஆனதும் அந்த அணி வெற்றி பெற்றது.

கோட்டைவிட்டார்

கோட்டைவிட்டார்

தற்போது ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்று முதல் போட்டியிலேயே அந்த அணி தோல்வியை தழுவியது. எப்போதும் பேட்டிங்கில் ரன் குவிக்கும் ராகுல், இம்முறை டக் அவுட்டாகி வெளியேறினார். குஜராத் அணியின் விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்தினாலும், அந்த தொடக்கத்தை பயன்படுத்த தெரியாமல் கோட்டை விட்டார் ராகுல்.

மோசமான முடிவு

மோசமான முடிவு

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், நேற்று ராகுலில் மோசமான கேப்டன்சிக்கு ஒரே ஒரு சம்பவத்தை பார்த்தாலே போதும். நேற்று சமீரா, ஆவேஷ் கான் ஆகியோருக்கு ஓவர்கள் இருந்த போதிலும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பார்ட் டைம் வீரர் தீபக் ஹூடாவை 3வது ஓவர் வீச அழைத்தார் ராகுல். ஆனால் குஜராத் அணி வீரர்கள் அந்த ஓவரில் ரொம்ப தேங்ஸ் ராகுல் என்று மனதில் கூறிவிட்டு, 22 ரன்களை விளாச ஆட்டமே மாறியது.

ஒரு வெற்றி கூட இல்லை

ஒரு வெற்றி கூட இல்லை

இது எல்லாம் கூட பரவாயில்லை தோல்விக்கு பிறகு பேசிய ராகுல், நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இந்த தோல்வி கூட எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி தான் என்று பஞ்ச் அடித்தார். கேப்டன் பொறுப்பு என்பது எல்லோருக்குமானது அல்ல, அது வரவில்லை என்றால் ஒதுங்கி கொண்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு தருவது தான் நமக்கும், நமது அணிக்கும் நாம் செய்யும் நல்ல விசயமாகும். நடப்பாண்டில் ராகுல் கேப்டனாக ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்பது கூடுதல் தகவல்.

Story first published: Tuesday, March 29, 2022, 17:48 [IST]
Other articles published on Mar 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+