மும்பைன்னா லட்டு சாப்பிட்ற மாதிரி.. ரோகித் படைக்கு எதிராக தொடர்ந்து 2வது சதம்.. கேஎல் ராகுல் அபாரம்
மும்பை: ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்தில் விளையாடியது. 37வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கேக்கு எதிராக களமிறங்கிய அதே அணி தான் லக்னோவுக்கு எதிராகவும் களமிறங்கியது.
மும்பை அணியில் மாற்றம் செய்யாதது ரோகித் சர்மா மேல் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

முதலில் பொறுமை
இதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுலும், குயின்டன் டி காக்கும் களமிறங்கினர். முதல் 2 ஓவரில் மும்பை அணி கட்டுக்கோப்பாக பந்துவீச வெறும் 6 ரன்கள் தான் சென்றது. இதனையடுத்து டேனியல் சாம்ஸ் வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி 13 ரன்களை லக்னோ அணி சேர்த்தது.

கேட்ச் மிஸ்
இதன் பின்னர் பும்ரா ஓவர் வீச வந்தார். இதில் 5வது பந்தில் குயின்டன் டி காக் கொடுத்த எளிய கேட்ச்சை தவறவிட்டதும் மட்டுமல்லாமல் பந்தை சிக்சருக்கு திலக் வர்மா விட்டார். எனினும் அடுத்த பந்திலே ரோகித் சர்மா அபாரமாக கேட்ச் பிடிக்க டி கார் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்
இதனையடுத்து, ரன் அடிக்கும் வேகத்தை லக்னோ அணி அதிகப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியது. ஆனால் அது அந்த அணிக்கு சரிவை தந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட் , குர்னல் பாண்டியா 1 ரன், தீபக் ஹூடா 10 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க லக்னோ அணி 121 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து தடுமாறியது.
Recommended Video

கேஎல் ராகுல் சதம்
ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராகுல், 37 பந்துகளில் அரைசதம் விளாசினார். 30 பந்துகளில் 29 ரன்கள் அடித்த அவர், அடுத்த 7 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் மும்பை அணிக்கு எதிராக அதிக முறை அரைசதம், அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ராகுல் படைத்தார். இதன் பிறகும் அதிரடியை காட்டிய ராகுல், நடப்பு சீசனில் மும்பைக்கு எதிராக 2வது சதம் விளாசினார். இதன் மூலம் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications