Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்கலில் மாட்டிய வில்லியம்சன்.. ஐதராபாத் vs லக்னோ போட்டி.. ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து ரெடி!!

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு அதிரடிகளுடன் நிறைந்த ஸ்பெஷல் விருந்து காத்துள்ளது.

மும்பை DY பாட்டில் மைதானத்தில் நடைபெறும் 12வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி மிகவும் கட்டாயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் அணி பரிதாபம்

ஐதராபாத் அணி பரிதாபம்

கடந்த சீசனில் மோசமாக வெளியேறிய ஐதராபாத் அணிக்கு இந்தாண்டு தொடக்கமும் மோசமாகவே உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் ஐதராபாத் அணி 61 ரன்கள் வித்தயாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த அணியின் பேட்டிங்கில் பெரும் ஏமாற்றம் இருந்தது.

வீரர்களின் கட்டாயம்

வீரர்களின் கட்டாயம்

பேட்டிங்கில் எய்டன் மர்க்கரம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே ஓரளவிற்கு ரன்கள் குவிக்க, மற்ற அனைவரும் சொதப்பினர். பந்துவீச்சில்

உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தனர். எனவே இன்று முழு தவறையும் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளார்.

லக்னோவின் பலம்

லக்னோவின் பலம்

இதே போல மற்றொரு புறம் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி கண்டுள்ளது. அதுவும் பலம் வாய்ந்த சிஎஸ்கே அணியை வென்று அசத்தியது. எனவே தனது வெற்றி பாதையை தொடர வேண்டும் என்ற கட்டாயத்தில் கே.எல்.ராகுல் இருக்கிறார்.

அதிரடி உள்ளதா?

அதிரடி உள்ளதா?

போட்டி நடைபெறும் DY பாட்டில் மைதானத்தில் சராசரியாக முதல் இன்னிங்ஸில் 165+ ரன்கள் வருகிறது. எனினும் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளன. நடப்பு தொடரிலும் பனிப்பொழிவு பிரச்சினையால் 2வது பவுலிங் செய்யும் அணி திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 4, 2022, 20:31 [IST]
Other articles published on Apr 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+