Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னப்பா தப்பு பண்ணாரு.. கே.எல்.ராகுலுக்கு லட்சங்களில் அபராதம்.. ஸ்டோய்னிஸுக்கு ஸ்பெஷல் கவனிப்பு!

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தவறு செய்ததற்காக கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டோய்னிஸ் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் நேற்று ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் போட்டிப்போட்டன.

இதில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலிலும் 2வது இடத்திற்கு முன்னேறியது.

லக்னோ தோல்வி

லக்னோ தோல்வி

இதில் லக்னோ அணி தான் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி கடைசி 12 பந்துகளில் லக்னோ அணிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. எனினும் அதனை சரியாக பயன்படுத்தாமல் தோல்வியை தழுவியது.

கே.எல்.ராகுலுக்கு அபராதம்

கே.எல்.ராகுலுக்கு அபராதம்

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பிசிசிஐ விதிமுறைகளை மீறியதாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்ன தவறு செய்தார் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் தவறை கே.எல்.ராகுலே ஒப்புக்கொண்டுள்ளதாகவும், லெவல் 1 விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டோய்னிஸின் நிலை

ஸ்டோய்னிஸின் நிலை

இதே போல லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து பிசிசிஐ சார்பில் கண்டன கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. இனி இது போல் நடந்தால் விளையாட தடைவிதிக்கப்படும் என்பது போல குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் என்ன காரணம் என அறிவிக்கப்படவில்லை.

Recommended Video

Virat Kohli Needs a Break, Says Ravi Shastri | OneIndia Tamil
 உண்மை காரணம் என்ன

உண்மை காரணம் என்ன

நேற்றைய போட்டியில் ஸ்டோய்னிஸ் நடுவர்களை உடற்மொழியில் மிரட்டியதே காரணமாக பார்க்கப்படுகிறது. ஹாசல்வுட் வீசிய ஒரு வைட் பந்தை, நடுவர் சரியான பந்து எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டோய்னிஸ், நடுவர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக கத்தினார். இது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 20, 2022, 14:26 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+