
நல்ல தொடக்கம்
தொடக்க வீரராக லக்னோ அணியின் டி காக் மற்றும் ராகுல் களமிறங்கி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 4.2வது ஓவரிலேயே 42 ரன்கள் அடித்திருந்தது. அப்போது டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் தீபக் ஹூடாவும் கேஎல் ராகுலும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோர் வேகத்தை அதிகரித்தனர்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்
32 பந்துகளில் தீபக் ஹூடா அரைசதம் விளாசினார். இது நடப்பு சீசனில் 3வது அரைசதமாகும். 52 ரன்கள் எடுத்திருந்த போது பந்துவீசிய ஷர்துல் தாக்கூரிடம் பிடிப்பட்டு திபக் வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்து வலுவான அடிதளத்தை அமைத்தது. இதனையடுத்து ராகுலும் அதிரடியை காட்ட 51 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம். 20 ஓவர் முடிவில் 195 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது.

டெல்லி ஏமாற்றம்
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பிரித்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 3 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர். மிட்செல் மார்ஷ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

மோஷின் கான் அபாரம்
அதிரடி வீரர் பொவேல் 35 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவரில் 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூரு எழுந்தது. மோஷின் கான் வீசிய 16 ஓவரில் பொவோல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, டெல்லி அணியால் 14 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் லக்னோ 7வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு சென்றது.


Click it and Unblock the Notifications











