For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்- 2 புதிய சாதனை படைத்த கேஎல் ராகுல்.. தீபக் ஹூடாவும் கலக்கல்.. டெல்லிக்கு சரியான சவால்

மும்பை: ஐபிஎல் தொடரின் 45வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியுடன் லக்னோ பலப்பரீட்சை நடத்தியது.

Recommended Video

KL Rahul அதிரடி ஆட்டம்.. Delhi Capitals-ஐ வீழ்த்திய Lucknow

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் வழக்கம் போல் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி புதிய 2 சாதனைகளை படைத்தார். இந்த ஆட்டத்தில் ஆவேண் கானுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருந்தது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

தொடக்க வீரராக லக்னோ அணியின் டி காக் மற்றும் ராகுல் களமிறங்கி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 4.2வது ஓவரிலேயே 42 ரன்கள் அடித்திருந்தது. அப்போது டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் தீபக் ஹூடாவும் கேஎல் ராகுலும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோர் வேகத்தை அதிகரித்தனர்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

கேஎல் ராகுல் ஒரு பக்கம் பொறுப்பாக விளையாட, மறு பக்கம் தீபக் ஹூடா அதிரடியை காட்டினார். 32 பந்துகளில் தீபக் ஹூடா அரைசதம் விளாசினார். இது நடப்பு சீசனில் 3வது அரைசதமாகும். 52 ரன்கள் எடுத்திருந்த போது பந்துவீசிய ஷர்துல் தாக்கூரிடம் பிடிப்பட்டு திபக் வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்து வலுவான அடிதளத்தை அமைத்தது.

கேஎல் ராகுல் சாதனை

கேஎல் ராகுல் சாதனை

இதனையடுத்து ராகுலும் அதிரடியை காட்ட 51 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் அதிவேகமாக 150 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை படைத்த கேஎல் ராகுல், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 5 சீசன்களில் 400 ரன்கள் அடித்தவர் என்ற மைல்கல்லையும் எட்டினார். இதற்கு முன்பு ரெய்னா தான் இப்படி ஒரு சாதனையை செய்துள்ளார்.

196 இலக்கு

196 இலக்கு

லக்னோ அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முக்கிய கட்டத்தில் லக்னோ விக்கெட்டுகளை வீழ்த்தியதால் , ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 195 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. கடைசி 5 ஓவரில் லக்னோ 50 ரன்கள் எடுத்தது. இதில் ஸ்டோனிஸ் 17 ரன்களும், குர்னல் பாண்டியா 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

Story first published: Sunday, May 1, 2022, 18:19 [IST]
Other articles published on May 1, 2022
English summary
IPL 2022 – Lucknow set 196 Runs Target for Delhi- KL Rahul created 2 record ஐபிஎல்- 2 புதிய சாதனை படைத்த கேஎல் ராகுல்.. தீபக் ஹூடாவும் கலக்கல்.. டெல்லிக்கு சரியான சவால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+