Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- லக்னோ அணியை கைவிட்ட வெளிநாட்டு வீரர்கள்.. 4 முக்கிய வீரர்கள் ஆப்சென்ட்.. குழப்பத்தில் ராகுல்

டெல்லி: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனில் புதயதாக களமிறங்கியுள்ள 2 கத்துக்குட்டி அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

ஆம், புதிய அணிகளாக குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் ஆகிய அணிகள் இன்று எவ்வாறு விளையாடும் என்பதை காண ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், லக்னோ அணிக்கு கேஎல் ராகுலும் கேப்டனாக தலைமை தாங்குகின்றனர்.

4 பேர் இல்லை

4 பேர் இல்லை

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட அணியான லக்னோவுக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக உள்ளது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள். ஆனால் லக்னோ அணி தொடக்கத்தில் எடுத்த 8 வெளிநாட்டு வீரர்களில் 4 பேர் தற்போது இல்லை. காயம் காரணமாக மார்க்வுட் லக்னோ அணியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஆண்டிரூ டை சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னடைவு

பின்னடைவு

ஆனால் குவாரண்டைன் விதிகளால் இன்றைய போட்டியில் பங்கேற்பது சந்தேகமே. இதே போன்று லக்னோ அணி பெரிதும் நம்பிய மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், கெயில் மெயர்ஸ் ஆகியோர் முதல் வாரத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிளான் பி

பிளான் பி

இதனால் கைவசம் இருக்கும் குயின்டன் டி காக், லீவிஸ், துஸ்மந்த் சமீரா ஆகியோரை வைத்து தான் பிளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு கேஎல் ராகுல் தள்ளப்பட்டுள்ளார். மேலும், இந்திய வீரர்களான மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, குர்னல் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனிடையே குராத் அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் கடைசி நேரத்தில் விலகினார். அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரரான ரஹமனுல்லா குர்பாசை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. அதிரடி வீரராக அவர் அறியபட்டாலும், அவர் அடித்த ரன்கள் எல்லாம் கத்துக்குட்டி அணிகளுடன் தான். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் என்ன சாதிப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வளவு காசு போட்டும் தொடக்கம் சரியில்லையே என இரு அணி உரிமையாளர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Story first published: Monday, March 28, 2022, 17:00 [IST]
Other articles published on Mar 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+