Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டைமண்ட் டக்கான கேஎல் ராகுல்.. ரஸில், நரைனின் தரமான செய்கை..கொல்கத்தா வெல்ல தீவிரம்

புனே: ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது.

புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள லக்னோ அணியும், 8வத இடத்தில் உள்ள கேகேஆர் அணியும் மோதும், இந்த அட்டத்தில் லக்னோ வென்றால் சிஎஸ்கே அணிக்கு சாதகம்.

லக்னோ அணியில் ஆவேஷ் கான் பிளேயிங் லெவனில் இரும்பினார். டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டைமண்ட் டக்

டைமண்ட் டக்

தொடக்க வீரராக குயின்டன் டி காக், கேஎல் ராகுல் களமிறங்கினர். ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் கேஎல் ராகுல் டைமண்ட் டக் அவுட் ஆனார். அதாவது ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தால் அதன் பெயர் டைமண்ட் டக். இதனையடுத்து குயின்டன் டி காக், தீபக் ஹூடா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

குயின்டன்- தீபக் ஜோடி

குயின்டன்- தீபக் ஜோடி

குயின்டக் டி காக் 29 ரன்களில் அரைசதமும், தீபக் 27 பந்துகளில் 41 ரன்களும் அடித்து இருந்த நிலையில் இருவரும் முறையே நரைன், ரஸில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் மீண்டும் அணி கொஞ்சம் சறுக்கியது. இதனால் பொறுமையாக விளையாடிய குர்னல் பாண்டியா 27 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

குட்டி தோனி

குட்டி தோனி

இதனையடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 14 பந்துகளில் 28 ரன்கள் அவர் அடித்தார். இதில் 3 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதே போன்று குட்டி ஏபிடி, பெயரிலேயே தோனி என்று வெறும் 3 போட்டியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடிய பதோனியும் கடந்த சில போட்டிகளாக சொதப்பினார்.

177 ரன்கள் இலக்கு

177 ரன்கள் இலக்கு

பதோனி 18 பந்தில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து திணறினார். இறுதியில் ஜேசன் ஹோல்டர் மட்டும் அதிரடியாக விளையாடி 2 சிக்சர்கள் விளாசினார். 4 பந்தில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் பெவிலியன் திரும்பினார். இதனால் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 5 ஓவரில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரஸில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Story first published: Saturday, May 7, 2022, 21:55 [IST]
Other articles published on May 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+