Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எல்லாருக்கும் ஆப்பு இருக்கு..!!”.. கோலியிடம் ஏற்பட்ட ஸ்பெஷல் மாற்றம்.. மேக்ஸ்வெல் கடும் எச்சரிக்கை!

மும்பை: விராட் கோலியின் தற்போதைய நிலை குறித்து ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த முறை கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

கடந்த சீசனுடன் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டாப் ஆர்டரில் தேவ்தத் பட்டிக்கல், விராட் கோலி, மேக்ஸ்வெல், டூப்ளசிஸ் என 4 அட்டகாச வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு பேட்டிங் அதிரடியாக உள்ளது.

மேக்ஸ்வெல் எச்சரிக்கை

மேக்ஸ்வெல் எச்சரிக்கை

இந்நிலையில் இதில் விராட் கோலி தான் இந்த முறை டேஞ்சர் வீரர் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கேப்டன்சி தான் கோலிக்கு பெரிய பொறுப்பாக இருந்தது. தற்போது அது இல்லை என்பதால் கோலியுடைய ஆக்ரோஷத்தை இனி முழுமையாக பார்க்கலாம். எதிரணிகள் அவரின் பேட்டிங்கை பார்த்து பயப்பட வேண்டிய சூழல் வரும்.

தனிப்பட்ட விஷயம்

தனிப்பட்ட விஷயம்

அடுத்த சில ஆண்டுகளுக்கு விராட் கோலிக்கு எந்தவித அழுத்தங்களும் இல்லை. இதனால் அவர் தனது பழைய ஃபார்மை மீண்டும் கொண்டு வருவார். எப்போதுமே எதிரணிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கக்கூடியவர் விராட் கோலி. கோலியிடம் இந்தாண்டு ஒரு தனிப்பட்ட மாற்றம் தெரிகிறது.

புதிய மாற்றம் என்ன

புதிய மாற்றம் என்ன

விராட் கோலியை எப்போதுமே சரியான முடிவு எடுக்கிறாரா என்பதை வைத்துதான் மதிப்பிடுவார்கள். ஆனால் தற்போது அவரின் உணர்ச்சிகளை வைத்து மதிப்பிடுகிறார்கள். சமீபத்தில் மிகவும் நிதானமான கோலியை பார்க்க முடிகிறது. அவருடன் சேர்ந்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. எதிரணிக்கு தலைவலி வந்துக்கொண்டே உள்ளது என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

Story first published: Friday, March 18, 2022, 10:20 [IST]
Other articles published on Mar 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+