ஐபிஎல் - டக் அவுட்டான வீரரின் தலையில் தட்டிய மாயங் அகர்வால்.. வைரலாகும் காட்சி
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது டக் அவுட்டான பஞ்சாப் வீரரை மாயங் அகர்வால் தலைடியல் தட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் டுபிளஸிஸ் மற்றும் விராட் கோலியின் அபார ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் அந்த அணி 205 ரன்கள் குவித்தது.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

அதிரடி தொடக்கம்
பஞ்சாப் அணி கேப்டன் மாயங் அகர்வால் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விரட்டி 24 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். மறுமுணையில் அனுபவ வீரர் ஷிகர் தவானும் அதிரடியை காட்டி ரன்களை குவிக்க, பெங்களூரு அணி சற்று பதறியது. எனினும் டுபிளஸிஸ் ஹசரங்காவை பந்துவீச அழைக்க, பஞ்சாப் அணி 71 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது.

திருப்புமுனை
இதன் பின்னர் களமிறங்கிய இலங்கையை சேர்ந்த ராஜபக்சா யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க, பஞ்சாப் அணியின் ஸ்கோர் பெட்ரோல் விலை போல் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் 14வது ஓவரை பெங்களூரு அணியின் சிராஜ் வீச வந்தார். அதற்கு முன்பு வரை சிராஜை பஞ்சாப் அணி வீரர் பொளந்து எடுத்திருந்தனர்.

ராஜ் பவா அவுட்
இதனால் ராஜபக்சா சிராஜை தாக்க முயன்று தனது விக்கெட்டை பறி கொடுக்க, அப்போது தான் களத்துக்கு வந்தார் இந்திய அண்டர் 19 உலகக் கோப்பை வீரர் ராஜ் பவா. ராஜ் பவா, அண்டர் 19 உலககோப்பை போட்டியில் அதிவேக சதம் மற்றும் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அதிரடி ஆல்ரவுண்டர் ஆவர். ஆனால் ராஜ் பவா எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
Recommended Video

மாயங் செயல்
அப்போது ஏமாற்றத்துடன் களத்துக்கு திரும்பிய ராஜ் பவாவை , பஞ்சாப் அணி கேப்டன் மாயங் அகர்வால் தலையில் செல்லமாக தட்டி தடவி கொடுத்தார். ஏமாற்றத்துடன் வந்த வீரரை தலையில் தட்டி கொடுத்து பாராட்டிய மாயங் அகர்வாலின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். எனினும் ஹாட்ரிக் பாலை எதிர்கொண்ட தமிழக வீரர் ஷாரூக்கான், சிராஜின் ஹாட்ரக் சாதகையை தடுத்தார்.


Click it and Unblock the Notifications