
சிஎஸ்கேவுக்கு சிக்கல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோரை தக்கவைத்துவிட்டு, மீதமிருந்த அனைத்து முக்கிய வீரர்களையும் கழட்டிவிட்டுள்ளது. ஆனால் அந்த அணி கழட்டிவிட்ட வீரர்களுக்கு தற்போது மற்ற அணிகள் ஏலம் எடுக்கப்போட்டி போட்டு வருவதால், சிஎஸ்கே அணி வேறு வீரர்களை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.

தோனி புது முடிவு
சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மனதில் வைத்து தான் ஏலம் எடுக்கப்பட வேண்டும் என தோனியே நேரடியாக சென்னை வந்து திட்டம் வகுத்துக்கொடுத்தார். இதற்காக உள்நாட்டு தொடர்கள் ஒவ்வொன்றையும் நேரடியாக பார்த்து அடுத்த கேப்டன் யார் என்பது வரை திட்டம் போட்டு வைத்துள்ளார்.

என்ன திட்டம்
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு இந்த முறை அதிகப்படியான இளம் வீரர்களை தட்டித்தூக்குவதே தோனியின் முக்கிய திட்டமாக உள்ளது. அதன்படி U19 உலகக்கோப்பையில் கலக்கிய இளம் வீரர்கள், உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக சோபித்த வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளது. குறிப்பாக யாஷ் துல், ஷாருக்கான், அங்க்ரிஷ், ராஜ் பவா என குறைந்த அடிப்படை விலைக்கொண்ட வீரர்களை தோனி எடுக்கவுள்ளார். அவர்களுக்காக பெரும் தொகையை கேட்கவுள்ளதாக தெரிகிறது.

முற்றிலும் மாறும் ஃபார்முலா
ஆனால் கடந்த 14 வருடங்களாக சிஎஸ்கேவின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமே அவர்கள் சீனியர்களின் படையாக இருந்தது தான். "வயதானவர்களின் அணி" என்று அழைக்கப்பட்ட போதும், அனுபவம் தான் சிறந்தது என தோனி ஒவ்வொரு முறையும் ப்ளே ஆஃப் கொண்டு சென்று நிரூபித்துக்காட்டினார். மேலும் 4 கோப்பைகளை வென்றுக்கொடுத்தார். ஆனால் சிஎஸ்கே வரலாற்றிலேயே புது முயற்சியாக தற்போது இளம் படையை களமிறக்க திட்டமிட்டுள்ளார். அதுவும் தோனி ஓய்வு பெற்று வெளியேறும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
Recommended Video

இளம் வீரர்கள் கேப்டன்சி
40 வாயதாகும் தோனி சமீப காலமாக ஐபிஎல் திட்டங்கள் எதுவும் பெரிதாக பலனளிக்காமல் உள்ளது. இளம்படையை கொண்ட ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸை சமாளிக்க தோனி பெரும் சிரமப்பட்டார். இனி வரும் சீசன்களில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் என பல அணிகள் அதுபோல் உருவாகும் என்பதால் அனுபவமே இல்லாதவர்கள் கையில் சிஎஸ்கேவை விட்டுச்செல்வதா என ரசிகர்கள் தோனி குறித்து அதிருப்தி கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications