Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இடத்திற்கு ஆசைப்பட்ட அம்பத்தி ராயுடு.. விட்டு வைக்குமா சிஎஸ்கே.. மெகா ஏலத்திற்கு பெரும் ப்ளான்!

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியின் இடத்திற்கு அம்பத்தி ராயுடு ஆசைப்பட்டுள்ளதால், அவரை எப்படியாவது வாங்க அணி நிர்வாகம் முயன்று வருகிறது.

ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் அறிவுரைப்படி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

சிஎஸ்கே அணிக்காக இந்த முறை கேப்டன் தோனியே நேரடியாக மெகா ஏலத்தில் பங்கேற்று ஏலம் கேட்கவுள்ளார். அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு அதிக போட்டிகள் இருப்பதால் மாற்று வீரர்களை தோனி தேர்வு செய்யவுள்ளார். ஆனால் இதில் பழைய வீரர் அம்பத்தி ராயுடுவை மட்டும் எவ்வளவு தொகை கொடுத்தாவது மீண்டும் எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ராயுடு போட்ட திட்டம்

ராயுடு போட்ட திட்டம்

சென்னை அணிக்காக மிடில் ஆர்டரில் பல முறை அம்பத்தி ராயுடு வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார். கடந்த சீசனில் அவரின் ஃபார்ம் சிறப்பாக இருந்த போதும் சிஎஸ்கே கழட்டிவிட்டது. இதனையடுத்து இந்த மெகா ஏலத்தில் அவர் தன்னை ரூ. 2 கோடி பிரிவில் பதிவு செய்துக் கொண்டுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் தன்னை, பேட்ஸ்மேன் என குறிப்பிடாமல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 தோனியின் இடம் ராயுடுவிற்கு

தோனியின் இடம் ராயுடுவிற்கு

இது சிஎஸ்கேவின் கவனத்தை ஈர்த்துள்ளது. தோனி இந்தாண்டுடன் ஓய்வு பெற்றுவிடுவார் எனக் கூறப்படும் சூழலில் அடுத்து விக்கெட் கீப்பர்களே இல்லை. எனவே மிடில் ஆர்டரில் ஒரு நம்பிக்கை வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் அம்பத்தி ராயுடுவை செயல்பட வைக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ள அம்பத்தி ராயுடு விக்கெட் கீப்பராக இருந்து ஃபீல்ட் செட்டிங்கிற்கும் உதவுவார்.

Recommended Video

I idolize MS Dhoni and wish to become a finisher like him: Shahrukh Khan | Oneindia Tamil
 கீப்பிங் அனுபவம்

கீப்பிங் அனுபவம்

அம்பத்தி ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது, சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு தோனிக்கு மாற்றாக சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். இனி தோனிக்கு பதிலாக முழு நேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவதாரம் எடுக்கவும் தயாராகவுள்ளார் என தெரியவந்துள்ளது.

Story first published: Thursday, February 3, 2022, 18:39 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+