Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: “பிராவோ இனி வேணாம்” மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு குறிவைத்த தோனி.. சங்கடத்தில் சிஎஸ்கே!!

சென்னை: சிஎஸ்கேவின் முன்னணி வீரராக இருந்த டுவைன் பிராவோவிற்கு பதிலாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரை களமிறக்க தோனி திட்டமிட்டுள்ளார்.

ஐபிஎல் 2022 மெகா ஏலம் நெருங்கி வருவதால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

அணி நிர்வாகங்களிடம் இருந்தும் புதுப் புது தகவல்கள் கசிந்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

 டுவைன் பிராவோ வேண்டாம்

டுவைன் பிராவோ வேண்டாம்

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் முக்கிய ஆல்ரவுண்டர் இணைக்கப்படவுள்ளார். தோனியின் நெருங்கிய நண்பரும், சிஎஸ்கேவுக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவருமான டுவைன் பிராவோவை மெகா ஏலத்தில் எடுக்கப் போவதில்லை எனத் தெரிகிறது. கடந்த சீசனிலேயே பிராவோவின் ஃபார்ம் சற்றும் சொதப்பலாக இருந்ததால் வெளியில் உட்காரவைக்கப்பட்டார். பவுலிங்கில் அவரின் வேகமும் குறைந்துள்ளதால், ரன்கள் அதிகளவில் கசிகின்றன.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

இந்நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டரை சிஎஸ்கேவுக்குள் கொண்டு வர தோனி திட்டமிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக ஜேசன் ஹோல்டரின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாக உள்நாட்டு தொடரான கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர்களில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே அதிரடி காட்டியுள்ளார்.

ஆழமான பேட்டிங் வரிசை

ஆழமான பேட்டிங் வரிசை

சிஎஸ்கேவை பொறுத்தவரையில் மிக ஆழமான பேட்டிங் வரிசை வேண்டும் என்று நினைக்கும். அதன்படி தான் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் போன்றோரை மீண்டும் எடுக்க முடிவெடுத்துள்ளது. அவர்களுடன் ஹோல்டரையும் இணைத்துவிட்டால் அணி முழுவதும் பேட்டிங் மற்றும் பவுலிங் என அசுர பலத்தில் இருக்கும். இதற்காக தான் ஹோல்டரை எப்படியாவது எடுக்க ரூ.10 கோடி வரை ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

Recommended Video

Capped Overseas Players in IPL 2022 Auction | OneIndia Tamil
கேப்டன் வாய்ப்பு

கேப்டன் வாய்ப்பு

ஜேசன் ஹோல்டரை மெகா ஏலத்தில் எடுக்க மற்ற சில அணிகளும் குறிவைத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளும் ஜேசன் ஹோல்டரை ஏலம் எடுத்து அவரை கேப்டனாக நியமிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். ஹோல்டருக்கு உள்நாட்டு தொடர், சர்வதேச தொடர் என அனைத்திலும் கேப்டன்சி செய்த அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 7, 2022, 17:18 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+