Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஐபிஎல் மெகா ஏலம் தேதி இறுதியானது” 2 நகரங்களை குறிவைத்த பிசிசிஐ.. ஆனால் ஒரு சிக்கல் - முழு விவரம்!

மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள தேதி மற்றும் எங்கு நடக்க போகிறது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இருந்து 2 புதிய அணிகள் சேர்க்கப்படுவதால் மெகா ஏலத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இதே போல லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

இதனையடுத்து இனி மெகா ஏலம் நடைபெறுவது ஒன்று தான் மிச்சம் இருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகா ஏலத்தில் அனைத்து முக்கிய வீரர்களும் வேறு அணிகளுக்கு தாவ உள்ளனர். இதனை வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஏலம் ஒத்திவைப்பு

ஏலம் ஒத்திவைப்பு

இந்நிலையில் அது ஒரு மாத காலம் தள்ளிப்போயுள்ளது. அதாவது ஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் எனத்தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த முறை மெகா ஏலமானது 2 நாட்களாக பிரித்து நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு 2 நாட்களுக்கு மெகா ஏலம் கோலாகலமாக நடத்தப்பட்டது.

ஏன் இந்த தாமதம்

ஏன் இந்த தாமதம்

ஐபிஎல் ஏலம் தாமதமானதற்கு புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணியே பார்க்கப்படுகிறது. அந்த அணியை வாங்கியுள்ள சிவிசி கேப்பிடல்ஸ் நிறுவனம், சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படுவதற்கு தான் தாமதாகி வருகிறது.

எங்கே நடக்கிறது?

எங்கே நடக்கிறது?

புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் நடைபெற்ற நிலையில் வீரர்களின் ஏலம் இந்தியாவில் தான் நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் உள்ள தனியார் ஹோட்டல்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை இறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.

Story first published: Monday, December 20, 2021, 19:11 [IST]
Other articles published on Dec 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+