IPL: “17 பேருக்கு இவ்வளவு காசா!!”.. அடிப்படை தொகை கேட்டு ஆடிப்போன அணிகள்.. இந்தியர்களுக்கு டிமாண்ட்
மும்பை: ஐபிஎல் தொடரில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களுக்கும் ரூ.2 கோடி என அடிப்படை தொகை நிர்ணயிக்கப்பட்டதால் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அதில் பங்குபெறப்போகும் முழு வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
இதில் வீரர்களின் தொகைகளை கேட்ட பிறகு தான் அனைத்து அணிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

தொகை விவரம்
இந்த முறை மொத்தமாக 590 பேர் மெகா ஏலத்தில் பங்குபெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 370 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 220 வீரர்கள் அயல்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். வீரர்களின் அனுபவம் மற்றும் சமீப கால செயல்பாடுகளை கணக்கிட்டு அடிப்படை தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகைக்கு மொத்தமாக 48 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் 17 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தான் அணிகளுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

இந்திய வீரர்களின் ஆதிக்கம்
ஒவ்வொரு அணியும் இந்திய வீரர்களை தான் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனென்றால் ப்ளேயிங் 11ல் 4 அயல்நாட்டு வீரர்கள் தான் இருப்பார்கள். மீதமுள்ள 7 பேர் இந்திய வீரர்களாக இருப்பார்கள். அதுவும் சர்வதேச பவுலிங் மற்றும் பேட்டிங் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடிய முன்னணி வீரர்கள் ப்ளேயிங் 11க்கு தேவை. ஆனால் அவர்கள் அனைவரையுமே ரூ.2 கோடிக்கு அறிவித்துள்ளது பிசிசிஐ.

அணிகளின் சிக்கல்
பிசிசிஐ அறிவித்துள்ள 17 இந்திய வீரர்களையுமே அனைத்து அணிகளும் டார்கெட் செய்யக்கூடியவர்களாக உள்ளனர். இதனால் அவர்களின் தொகை கூடிக்கொண்டே செல்லும் என்பதால் பட்ஜெட்டை சமாளிக்க ஒவ்வொரு அணியும் என்ன செய்வது என்று புரியாமல் தற்போது இருந்தே கணக்கிட்டு வருகின்றனர். இதனை சமாளிக்க தான் தோனியும் சென்னைக்கு வருகைபுரிந்து திட்டம் போட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 கோடி அடிப்படை தொகையாக கொண்ட இந்திய வீரர்களின் பட்டியல்
1. அஸ்வின்
2. ஸ்ரேயாஸ் ஐயர்
3. ஷிகர் தவான்
4. முகமது ஷமி
5. தேவ்தத் பட்டிக்கல்
6. சுரேஷ் ரெய்னா
7. ராபின் உத்தப்பா
8. க்ருணால் பாண்ட்யா
9. ஹர்ஷல் பட்டேல்
10. தினேஷ் கார்த்திக்
11. இஷான் கிஷான்
12. அம்பத்தி ராயுடு
13. தீபக் சஹார்
14. புவனேஷ்வர் குமார்
15. ஷர்துல் தாக்கூர்
16. உமேஷ் யாதவ்
17. யுவேந்திர சஹால்


Click it and Unblock the Notifications