Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஆர்சிபி புதிய கேப்டன் இறுதி செய்யப்பட்டார்” கோலி பேச்சை கேட்டு நடக்கும் நபருக்கு குறி- விவரம்!

பெங்களூரு: ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக யாரை நியமிக்கவுள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த முறை 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் போட்டிகள் கடுமையாகியுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்போகும் வீரர்களின் விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது.

ஆர்சிபியின் திட்டம்

ஆர்சிபியின் திட்டம்

அதன்படி ஐபிஎல்-ல் மிகவும் பிரபலமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி ( ரூ. 15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் ( ரூ. 11 கோடி), முகமது சிராஜ் ( ரூ. 7 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. 4வது நபரை தக்கவைக்கவில்லை. இதனால் ஏலத்தின் போது பல முக்கிய வீரர்களை அந்த அணி முயல போகிறது என்பது தெரிந்தது.

நெருக்கடி

நெருக்கடி

விராட் கோலி, கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளதால், புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. அணியில் தற்போதைக்கு மேக்ஸ்வெல் மட்டுமே இருக்கிறார். ஆனால் அவரை கேப்டனாக நியமித்தாலும் அழுத்தம் காரணமாக பேட்டிங்கில் கோட்டை விட்டுவிடுவார் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. எனவே மெகா ஏலத்தில் தான் கேப்டனுக்கான வீரரை ஆர்சிபி குறிவைக்கவுள்ளது.

புது கேப்டன் யார்?

புது கேப்டன் யார்?

அந்தவகையில் கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த மணிஷ் பாண்டேவை கேப்டனாக நியமிக்க ஆர்சிபி முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ள பாண்டேவை கேப்டனாக நியமித்தால், விராட் கோலியின் அறிவுரைகளையும் அவ்வப்போது மனக்கசப்புகள் இன்றி கேட்டு செயல்படுவார் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மணிஷ் பாண்டேவின் சிறப்பு

மணிஷ் பாண்டேவின் சிறப்பு

ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மணிஷ் பாண்டேவுக்கு கடந்த 2 சீசன்கள் சரியாக அமையவில்லை. எனினும் அவர் தான் ஐபிஎல்-ல் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் ஆவார். வேறு அணியின் சூழலுக்கு செல்வதால், மீண்டும் பழைய ஃபார்முக்கு அவர் திரும்புவார் என ஆர்சிபி நம்புகிறது.

Story first published: Wednesday, December 29, 2021, 22:58 [IST]
Other articles published on Dec 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+