For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்த முறை பவுலர்கள் ஆதிக்கம்” 3 முன்னணி வீரர்களுக்கு கோடிகளை ஒதுக்கிய ஆர்சிபி..அப்படி என்ன ஸ்பெஷல்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் 3 முன்னணி பவுலர்களை ஆர்சிபி அணி டார்கெட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2022 மெகா ஏலம் நாளை பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இந்த முறை பெரும் தொகைகளை செலவு செய்தாவது சிறந்த அணியை உருவாக்கிட திட்டமிட்டுள்ளது.

 ஆர்சிபி திட்டம்

ஆர்சிபி திட்டம்

கடந்த சீசன்களில் ஆர்சிபி அணி என்னதான் பேட்டிங்கில் 200+ ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும், எளிதாக ரன்களை வாரி வழங்குவதை பார்த்திருப்போம். எனவே பவுலிங்கில் உள்ள பலவீனத்தை குறைப்பதற்காக தான் இந்த முறை 3 பவுலர்களுக்கு குறிவைத்துள்ளது. அவர்கள் முகமது சிராஜுக்கு உறுதுணையாக இருக்கவுள்ளனர்.

ஹோல்டர்

ஹோல்டர்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டருக்காக பல கோடிகளை ஆர்சிபி ஒதுக்கியிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். சிராஜுடன் முதல் பவர் ப்ளேவை தொடங்க இவர் உதவுவர். இதுமட்டுமல்லாமல் டெத் ஓவர்களிலும் ரன் வேகத்தை சமாளிக்கத்தெரிந்த அனுபவ வீரர். ஐபிஎல் தொடரில் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ள ஹோல்டர் 35 விக்கெட்களை எடுத்துள்ளார். அவரின் சராசரி 22.45 ஆகும்.

ஸ்பெஷலிஸ்ட்

ஸ்பெஷலிஸ்ட்

ஆர்சிபி அணிக்கு கடந்த காலங்களில் டெத் ஓவர்கள் ஸ்பெஷலிஸ்ட் போன்ற வீரர்கள் தேவைப்படுகின்றனர். முகமது சிராஜால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. எனவே நியூசிலாந்தின் லாக்கி ஃபெர்க்யூசன் அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவுக்காக விளையாடிய அவர், வெறும் 8 போட்டிகளில் 13 விக்கெட்களை சாய்த்தார். அவரின் எகானமி வெறும் 7.46 மட்டுமே ஆகும். இதனால் இந்த முறை அவரை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.

சீனியர் பவுலர்

சீனியர் பவுலர்

இந்திய அணியின் முன்னணி பவுலராக உள்ள முகமது ஷமியை வயதை காரணம் காட்டி பஞ்சாப் அணி கழட்டிவிட்டுள்ளது. எனினும் அவர் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து காட்டிக்கொண்டு தான் இருக்கிறார். பல அணிகளும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை என்றாலும், ஆர்சிபிக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஷமி தேவைப்படுகிறார். எனவே அவரை ஓரளவிற்கு செலவு செய்து எடுத்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளது.

Story first published: Friday, February 11, 2022, 14:07 [IST]
Other articles published on Feb 11, 2022
English summary
RCB Targetting 3 fast bowlers for a high bid range in IPL mega auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+