Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு திரும்பும் அதிரடி வீரர்.. ஐபிஎல் மெகா ஏலத்திற்காக ஸ்பெஷல் ஸ்கெட்சா?.. காரணம் என்ன?

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிரடி வீரர் ஒருவர் மீண்டும் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்போகும் 4 வீரர்களை அறிவித்துவிட்டன.

இதனையடுத்து புதிதாக வந்துள்ள 2 அணிகளும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தேர்வில் குதித்துவிட்டன. இதனால் மெகா ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மெகா ஏலம்

மெகா ஏலம்

அதன்படி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. அந்த அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது. அந்த அணியில் நீண்ட வருடங்களாக இருந்த பிராவோ, ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் அணிக்குள் எடுக்க ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கம்பேக் கொடுக்கும் வீரர்

கம்பேக் கொடுக்கும் வீரர்

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான அம்பத்தி ராயுடுவை மீண்டும் ஏலத்தில் எடுக்க அதிக கவனம் செலுத்தப்போவதாக தகவல் கசிந்துள்ளது. சென்னை அணிக்காக அவர் கடந்த 4 சீசன்களாக விளையாடிய போதும், இந்தாண்டு கழட்டிவிடப்பட்டார். மிடில் ஆர்டரில் தூண் போன்று உதவும் அவரை மீண்டும் அணிக்குள் எடுக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகிறது.

அம்பத்தி ராயுடுவின் பதில்

அம்பத்தி ராயுடுவின் பதில்

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த அம்பத்தி ராயுடு, சிஎஸ்கேவுக்காக விளையாடுவதற்கு தான் நான் விரும்புகிறேன். என்னை மெகா ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள் என்பது குறித்து என்னிடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. ஆனால் என்னை குறிவைத்து எடுக்கவிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த நம்பிக்கை உள்ளது.

Recommended Video

From CSK, Gabba Win To Neeraj's Gold- Indian Sports Moments 2021 | OneIndia Tamil
 சுவாரஸ்யம் அதிகம்

சுவாரஸ்யம் அதிகம்

ஒவ்வொரு அணியும் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் கலந்த அணியை உருவாக்க தான் முயலும். அழுத்தமான சூழல்களில் அனுபவ வீரர்கள் தான் கை கொடுப்பார்கள். எனவே இந்த முறை அதனை மனதில் வைத்து தான் அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் களமிறங்கும். இதனை பார்ப்பதற்கே மிக சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.

Story first published: Tuesday, December 28, 2021, 14:58 [IST]
Other articles published on Dec 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+