Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலத்தில் டி.நடராஜன் எங்கே?..அடிப்படை தொகையிலேயே பெரும் ஏமாற்றம்.. ஆர்வம் காட்டுமா அணிகள்!

சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு பெரும் ஏமாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

IPL Mega Auctionல் Natarajanக்கு ஏமாற்றம்! குறைவான Base Price | OneIndia Tamil

ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்காக இறுதி செய்யப்பட்ட வீரர்களின் இறுதிப்பட்டியலும், அவர்களின் அடிப்படை தொகையும் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 30 வீரர்களின் பெயர்கள் இந்த முறை மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ளது.

 நடராஜன் என்ன ஆனார்

நடராஜன் என்ன ஆனார்

ஐதராபாத் அணிக்காக விக்கெட் மழை பொழிந்து வந்த யார்க்கர் நடராஜன், அதன் மூலம் இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணியிலும் அறிமுகமாகி அசத்தினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது ஓய்வு எடுத்துக்கொண்ட நடராஜன் தற்போது கடும் பயிற்சிகள் மூலமாக ஃபுல் ஃபார்மில் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார்.

அடிப்படை தொகை எவ்வளவு

அடிப்படை தொகை எவ்வளவு

சர்வதேச களம் கண்டவர்கள், முன்னணி பவுலர்களுக்கு அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்படும். அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர்களுக்கு ரூ. 1 1/2 கோடி நிர்ணயிக்கப்படும். ஆனால் முழு தகுதியுடைய டி.நடராஜனுக்கு ரூ. 1 கோடி என்ற தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரபட்சம் காட்டப்பட்டதா?

பாரபட்சம் காட்டப்பட்டதா?

ஒரே ஒரு சீசனில் நடராஜனின் ஆட்டத்தை பார்த்து 3 வடிவ கிரிக்கெட்டிலும் வாய்ப்புக் கொடுத்த பிசிசிஐயே தற்போது அவரை குறைந்த விலைக்கு இறக்கியுள்ளது. ஆனால் ஃபார்ம் அவுட்டாகியுள்ள சில வீரர்களுக்கு ரூ. 2 கோடி அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆர்வம் காட்டுமா அணிகள்

ஆர்வம் காட்டுமா அணிகள்

இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் அணிகளும் நடராஜன் மீது ஆர்வம் காட்டவில்லை. தற்போது தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல் என நிறைய இளம் வீரர்கள் ஜொலித்து வருவதால், அவர்களை வாங்குவதற்காகவே அனைத்து அணிகளும் போட்டி போடுகின்றன. இதனால் நடராஜன் எந்தவித போட்டியும் இன்றி அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கே ஏலம் போக தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Wednesday, February 2, 2022, 16:26 [IST]
Other articles published on Feb 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+