For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 10 தனித்திறமைகள்.. மெகா ஏலத்தில் அசரவைக்கப்போகும் 10 முன்னணி வீரர்கள்..அடித்துக்கொள்ளும் அணிகள்

அந்த 10 வீரர்கள்.. ஐபிஎல் மெகா ஏலத்தில் கோடிகளை குவிக்கும் 10 முன்னணி வீரர்கள்.. அணிகள் கடும்போட்டி!

மும்பை: ஐபிஎல் அணிகளால் வேண்டாம் என ஒதுக்கப்பட்ட 10 முன்னணி வீரர்கள் தான் மெகா ஏலத்தில் பெரும் தொகைக்கு செல்வார்கள் என பிசிசிஐயே அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் இன்று பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கவுள்ளது.

இந்த மெகா ஏலத்தில் 10 சீனியர் வீரர்களுக்கு தான் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களை பழைய அணிகள் குறைத்து மதிப்பிட்டு வெளியேற்றியுள்ளன.

 ஐபிஎல் மெகா ஏலம்.. நேரலையை எங்கு? எப்படி? பார்ப்பது.. 600 வீரர்களுக்கான கடும் போட்டி இன்று தொடக்கம்! ஐபிஎல் மெகா ஏலம்.. நேரலையை எங்கு? எப்படி? பார்ப்பது.. 600 வீரர்களுக்கான கடும் போட்டி இன்று தொடக்கம்!

ஓப்பனிங்

ஓப்பனிங்

ஐபிஎல் தொடரில் முன்னணி ஓப்பனிங் வீரர்களாக வலம் வந்த ஷிகர் தவான் ( டெல்லி கேப்பிடல்ஸ்) டூப்ளசிஸ் ( சிஎஸ்கே ) குயிண்டன் டிக்காக் ( மும்பை இந்தியன்ஸ் ) ஆகியோர் பழைய அணிகளால் கழட்டிவிடப்பட்டனர். அவர்களுக்கு வயதாகிவிட்டது எனக்கூறி புறக்கணித்துவிட்டன. ஆனால் ஷிகர் தவான் மற்றும் டிகாக் ஆகியோர் இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடரில் வரிசையாக அரைசதம் அடித்து பதிலடி கொடுத்தனர். இதே போல டூப்ளசிஸும் உள்நாட்டு தொடர்களில் சதமடித்து அசத்தியுள்ளார்.

அவமானம்

அவமானம்

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் மற்றும், டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டன்சி பிரச்சினை காரணமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி காட்டி நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த 2 வீரர்களுமே மீண்டும் ஏதேனும் ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு பதிலடி கொடுக்க காத்துக்கொண்டுள்ளனர்.

அஸ்வின்

அஸ்வின்

வயதாகிவிட்டது, இனி டி20 போட்டிகளில் சிறப்பாக இருக்க மாட்டார் என டெல்லி அணி கழட்டிவிட்டவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் தற்போது டி20 உலகக்கோப்பை முதல் தென்னாப்பிரிக்க தொடரை சர்வதேச டி20 போட்டிகளில் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இந்திய களங்களில் அவரின் பவுலிங் இன்னும் பலமாக இருக்கும் என்பதால் சிஎஸ்கே உள்ளிட்ட பல அணிகளும் அவரை ஏலம் எடுக்க குறிவைத்துள்ளன.

கொல்கத்தா ஆல்ரவுண்டர்

கொல்கத்தா ஆல்ரவுண்டர்

இந்த முறை ஆல்ரவுண்டர்கள் தான் அதிக மவுசுடையவர்களாக உள்ளனர். அந்தவகையில் பேட் கம்மின்ஸும் அனைத்து அணிகளாலும் தேடப்படும் ஆல்ரவுண்டராக இருக்கிறார். கடந்த சீசனிலேயே கொல்கத்தா அணியின் கேப்டனாகவே நியமிக்கப்படவிருந்த கம்மின்ஸ் திடீரென விலகியிருந்தார். ஆனால் அவரின் மதிப்பை சர்வதேச போட்டிகளில் நிரூபித்திருப்பதால், மற்ற அணிகள் ஏலம் எடுக்க ஆர்வமாக உள்ளன.

பவுலர்கள்

பவுலர்கள்

உலகின் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் இருப்பவர்கள் ட்ரெண்ட் போல்ட், ககிஸ்கோ ரபாடா. முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். ஆனால் வீரர்களை தக்கவைப்பதில் இருந்த விதிமுறைகள் காரணமாக பழைய அணிகள் இவர்களை கழட்டிவிட்டன. இவர்கள் மூவருமே டெத் ஓவர்களில் மிகச்சிறப்பாக வீசக்கூடியவர்கள் என்பதால் பழைய அணிகளே மீண்டும் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளன. குறிப்பாக ஷமியை ஆர்சிபி ஏலம் எடுக்க குறிவைத்துள்ளது.

Recommended Video

DC Lost Ashwin, Dhawan, Rabada! RR, PBKS wins the Race | OneIndia Tamil
டாப் 10

டாப் 10

டேவிட் வார்னர், ஷிகர் தவான், குயிண்டன் டிகாக், டூப்ளசிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், பேட் கம்மின்ஸ், ரபாடா, ட்ரெண்ட் போல்ட், முகமது ஷமி

Story first published: Saturday, February 12, 2022, 9:15 [IST]
Other articles published on Feb 12, 2022
English summary
Here the top 10 valuable players who gets high price in IPL mega auction 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X