For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தனி மரமாக விடப்பட்ட தோனி.. அம்பயரிங்கில் நடந்த அநியாயம் செய்த..மும்பைக்கு எதிராக சிஎஸ்கே படுதோல்வி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Recommended Video

IPL 2022 Mumbai Indians அணிக்கு எதிராக CSK படுதோல்வி | Oneindia Tamil

59வது லீக் போட்டியாக நடைபெற்ற இந்த மோதல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸை போன்றே பவுலிங்கிலும் வெற்றி கிடைத்தது.

ஓப்பனிங்கில் அதிர்ச்சி

ஓப்பனிங்கில் அதிர்ச்சி

சென்னை அணியின் ஓப்பனிங்கே அதிர்ச்சி தான் இருந்தது. முதல் ஓவரிலேயே டெவோன் கான்வே மற்றும் மொயீன் அலி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். இதில் கான்வே எல்.பி.டபள்யூ அவுட்டை எதிர்த்து DRS கேட்டார். பந்தும் ஸ்டம்ப் மிஸ்ஸாகியிருந்தது.

டி.ஆர்.எஸ். இல்லை

டி.ஆர்.எஸ். இல்லை

ஆனால் மைதானத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் DRS முறை ரத்து செய்யப்பட்டதால் அவரின் விக்கெட் பறிபோனது. இதே போன்று ராபின் உத்தப்பாவும் DRS எடுக்க முடியாமல் 1 ரன்னுக்கு அவுட்டானார்.

தோனியின் போராட்டம்

தோனியின் போராட்டம்

பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இதன்பின்னர் வந்த வீரர்களான அம்பத்தி ராயுடு 10, ஷிவம் தூபே 10, பிராவோ 12, சிமர்ஜீட் சிங் 2 என அடுத்தடுத்து வெளியேறினர். மறுமுணையில் தனிமரமாக விடப்பட்ட கேப்டன் தோனி மட்டும் 36 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். எனினும் அவருக்கு யாருமே பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. இதனால் 16 ஓவர்களுக்குள் சிஎஸ்கே அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மும்பைக்கும் பிரச்சினை

மும்பைக்கும் பிரச்சினை

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கும் பேட்டிங் சரியாக இல்லை. தொடக்க வீரர்கள் இஷான் கிஷான் 6 ரன்களுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த டேனியல் சாம்ஸ் 1 ரன், ஹ்ரித்திக் ஷோக்கீன் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 33 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

 சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

மும்பை அணியும் குறைந்த ரன்னுக்குள் சுருண்டுவிடும் என அனைவரும் அஞ்சினர். ஆனால் பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா - டிம் டேவிட் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். திலக் வர்மா 32 பந்துகளில் 34 ரன்களும், டிம் டேவிட் 7 பந்துகளில் 16 ரன்களையும் அடித்தனர். இதனால் மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 103 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Thursday, May 12, 2022, 22:57 [IST]
Other articles published on May 12, 2022
English summary
MI vs CSK Match ( சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் போட்டி ) சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+