மும்பைக்கு ஆப்பு ரெடி.. ரசிகர்கள் எதிர்பார்க்காத சூழ்நிலை.. ஆர்சிபியை சமாளிப்பது கஷ்டம்- காரணம் என்ன
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, வெல்வது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகுந்த கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
18வது லீக் போட்டியாக நடைபெறும் இந்த மோதல், புனேவில் உள்ள மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தாண்டு தொடக்கமே சரிவாக தான் உள்ளது.

மும்பை அணிக்கு கட்டாயம்
மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. இதனால் 0 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மற்றொரு பக்கம் ஆர்சிபி அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி என 6வது இடத்தில் இருந்து வருகிறது. இதனால் இவற்றிலேயே ஆர்சிபி தான் முதன்மையாக உள்ளது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு
எனினும் கடந்த சீசன்களில் உள்ள வரலாறுகளின் படியும் ஆர்சிபிக்கு சற்று கூடுதல் பலம் உள்ளது. ஐபிஎல்-ல் இந்த இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 12 முறையும் மும்பை 19 முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் கடைசி சில போட்டிகளில் ஆர்சிபியின் கையே ஓங்கியுள்ளது.

கடந்த சீசன் விவரம்
கடந்த சீசனில் இந்த அணிகள் மோதிய 2 போட்டிகளிலுமே ஆர்சிபி அணி தான் அபார வெற்றி பெற்றிருந்தது. ஹர்ஷல் பட்டேல் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள், 2வது போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதே கூட்டணி இன்றும் களம் காணுகிறது.

முக்கிய சரிவு
மும்பை அணி பேட்டிங்கில் சற்று பலமாக உள்ள போதும், பவுலிங்கில் சற்று மோசமாக உள்ளது. ஆனால் ஆர்சிபி அணியில் டூப்ளசிஸ், கோலி, தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் என அட்டகாச பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், டேவிட் வில்லி என கூட்டணி உள்ளதால் மும்பை எப்படி சமாளிக்கப் போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications