IPL மும்பை அணிக்கு அடி மேல் அடி.. அதிரடி பேட்ஸ்மேன் விலகல்? என்ன செய்ய போகிறார் ரோகித்?
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் தொடக்கமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வரும் 26ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.
இதற்காக ஏற்கனவே மும்பை அணி, பயிற்சியை தொடங்கியது. ஏற்கனவே ஆர்ச்சர் அடுத்த ஆண்டு தான் விளையாடுவேன் என்று அறிவித்தார்.
தற்பேது மேலும் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் காயம் காரணமாக பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இதனால் பால்டன்ஸ் அதிர்ச்சியில் உள்ளனர்.

காயம்
மும்பை அணி ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே ரோகித் சர்மா, பும்ரா,பொலார்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்கவைத்து கொண்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ்க்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்கவில்லை.

உடல்தகுதி
தற்போது சூர்யகுமார் யாதவ் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வருவ்தற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்க்கு உடல் தகுதி பயிற்சி நடைபெற்றது. இதில், சூர்யகுமார் தோல்வியை தழுவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்கேற்க மாட்டார்
இதனால் அவர் உடல் தகுதியை பெறுவதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை அணிக்கு சில போட்டிகளில் விளையாட மாட்டார். சூரியகுமார் யாதவ், மும்பை அணியின் பேட்டிங் தூணாக விளங்குபவர். அவர் இல்லை என்றால் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

பின்னடைவு
மும்பை அணி எப்போதுமே எம்.ஜி.ஆர். போல் முதலில் அடி வாங்கிவிட்டு, பின்னர் தான் அடிப்பார்கள். இதனையடுத்து சூர்யகுமார் யாதவ்க்கு பதிலாக மாற்று வீரராக யாரை பயன்படுத்தலாம் என்ற யோசனையில் ரோகித் சர்மா உள்ளார். அந்த இடத்துக்கு பெரும்பாலும் டிம் டேவிட் அல்லது பிரவீஸ் ஆகியோரை மும்பை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications