Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணாம்பூச்சி காட்டிய மழை.. முக்கிய வீரருக்கு ஓய்வு வழங்கிய ரோகித்.. டெல்லியில் பலே பிளேயர்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பிளே ஆப்க்கு செல்ல கூடிய 4வது அணி எது என்று தீர்மானிக்க கூடிய முக்கிய போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

IPL 2022 – MI Make 2 changes in crucial match of the tournament

டெல்லி மும்பை அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் டெல்லி வென்றால் பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும். ஒரு வேலை தோற்றால் பெங்களூரு பிளே ஆப் வாய்ப்புக்கு செல்லும்.

இதனால் ஒட்டுமொத்த ஆர்சிபி அணியும் மும்பைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆர்சிபி அணி மும்பைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அவர்களது சமூக வலைத்தள படத்தை சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறத்துக்கு மாற்றிவிட்டனர்.

இந்த நிலையில், டாஸ் போடும் போது திடீரென்று மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்படமோ என்ற அச்சம் ஏற்பட்டது. எனினும் சிறிது நேரத்திலேயே மழை நின்றது. மழைப் பொழிவு இருந்ததால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் பந்து ஈரமாக இருப்பதால் சிரமம் ஏற்படலாம்.

மைக்கேல் இணையத்தளத்தில் ஏற்கனவே சொன்னது போல் இன்றைய ஆட்டத்தில் ஸ்டப்ஸ்க்கு பதிலாக பிரவீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று தமிழக வீரர் சஞ்சய் யாதவ் நீக்கப்பட்டு ஹிரித்திக் சோகின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் மகனுக்கு ரோகித் வாய்ப்பு தரவில்லை.

இதனிடையே டெல்லி அணியில் அதிரடி வீரர் பிரித்வி ஷா பிளேயிங் லெவனில் லலித் யாதவ்க்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. ஒரு வேலை மழை மீண்டும் குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு விடும். இதனால் பெங்களூரு பிளே ஆப்க்கு சென்றுவிடும்.

Story first published: Saturday, May 21, 2022, 19:51 [IST]
Other articles published on May 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+