Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை.. டேனியல் சாம்ஸ் கையில் பந்து.. சான்சே இல்லாத மும்பை சம்பவம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி கடைசி ஓவரில் வெற்றிக்கரமாக 9 ரன்களை பாதுகாத்து வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியும், கடைசி இடத்தில் உள்ள மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக பணித்தார்..

ஹிட்மேன் ரிட்டன்

ஹிட்மேன் ரிட்டன்

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி குஜராத் பந்துவீச்சை சிதற அடித்தது. ரோகித் சர்மா 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். இஷான் கிஷனும் தன் பங்கிற்கு 29 ரன்களில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 13 ரன்களிலும் திலக் வர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 10 ஓவர் முடிவில் 97 ரன்கள் எடுத்திருந்தது.

பொலார்ட் பரிதாபம்

பொலார்ட் பரிதாபம்

இதனையடுத்து பொலார்ட் 14 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களத்துக்கு வந்த டிம் டேவிட், தன்னுடைய திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 4 சிக்சர், 2 பவுண்டரி என 21 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் என்ற நிலையில் எட்டியது.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சாஹா மற்றும் சுப்மான் கில், பும்ரா உள்ளிட்ட அனைத்து வீரர்களின் ஓவர்களையும் பறக்கவிட்டனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்கள் சேர்த்தது. சுப்மான் கில் 36 பந்துகளில் 52 ரன்களும், விரித்மான் சாஹா 40 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அட்டமிழந்தனர்.

கடைசி ஓவர் திருப்புமுனை

கடைசி ஓவர் திருப்புமுனை

இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 14 ரன்கள் எடுத்து ஹிட் விக்கெட் ஆகி பரிதாபமாக வெளியேறியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. டேனியல் சாம்ஸ் கடைசி ஓவரை வீசினார். 3வது பந்தில் ராகுல் திவேட்டியா ரன் அவுட் ஆனார். இறுதியில் 2 பந்துகளை டேவிட் மில்லர் எதிர்கொண்டும் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Friday, May 6, 2022, 23:55 [IST]
Other articles published on May 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+