
டக் அவுட்
இதனையடுத்து, மும்பை அணி பேட்டிங் செய்ய வந்தது. சிஎஸ்கே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி அனல் பறக்க பந்துவீசி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரோகித் சர்மா, சாண்டனரிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.இதே போன்று முதல் ஓவரின் 5வது பந்தில் முகேஷ் சௌத்ரி வீசிய 5வது பந்தில் இஷான் கிஷன் கிளின் போல்ட் ஆகி டக் அவுட் ஆனார்.இதே போன்று முகேஷ் சௌத்ரி வீசிய 2வது ஓவரில் பிரவீஸ் தோனியிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் மூலம் மும்பை அணி 23 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

வீணடித்த சிஎஸ்கே
மிட்செல் சாண்டனர் வீசிய ஓவரில் சூர்யகுமார் இறங்கி வந்து அடிக்க முயல, அதனை தோனி ஸ்டம்ப் அவுட் செய்யாமல் மிஸ் செய்தார். இதே போன்று முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் திலக் வர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிராவோ மிஸ் செய்தார். இதே போன்று பிரவிஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார்.

தோனி வைத்த பொறி
அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அப்போது களத்துக்கு வந்த பொலார்ட், சிக்ஸ் அடித்து சிஎஸ்கேவை மிரள வைத்தார். எனினும் முன்னாள் கேப்டன் தோனி பொலார்ட்க்கு பவுண்டரி லைனில் அவருக்கு நேராக ஃபில்டரை வைத்தார். அப்போது தீக்சணா பந்துவீச்சை தூக்கி அடித்து தோனி வைத்த பொறியில் எலி போல் சிக்கினார் பொலார்ட்.
Recommended Video

பிராவோ சாதனை
2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இதே மைதானத்தில் தோனி இதே யுத்தியை கையாண்டு பொலார்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி 120 ரன்களுக்கு சுருண்டு விடும் என எதிர்பார்த்த நிலையில், திலக் வர்மா பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் பிராவோ சிஎஸ்கே அணிக்காக 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.


Click it and Unblock the Notifications











