Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வில்லியம்சனுக்கு செக் வைத்த காவ்யா.. ஐதராபாத் அணியில் 2 மாற்றமும்.. தமிழக வீரருக்கு ரோகித் வாய்ப்பு

மும்பை: ஐபிஎல் தொடரில் வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் ஐதராபாத் அணி, இன்று மும்பையை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி வென்றே ஆக வேண்டும். இல்லையேனில் தொடரை விட்டு வெளியேற வேண்டியது தான்.

அதே சமயம், மும்பை அணி வென்றால் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய 4 அணிகளுக்கு நல்லது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவிச்சை தேர்வு செய்துள்ளது.

வில்லியம்சனுக்கு செக்

வில்லியம்சனுக்கு செக்

இதனால் ஐதராபாத் அணியில் இன்று அதிரடி மாற்றம் நடைபெற்றுள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டனான வில்லியம்சன் 12 போட்டியில் விளையாடி 208 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோரே 57 ரன்கள் தான். இதனால் வில்லியம்சனை அணியை விட்டு நீக்க வேண்டும் என ஐதராபாத் அணி உரிமையாளர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஐதராபாத் அணியில் மாற்றம்

ஐதராபாத் அணியில் மாற்றம்

ஆனால், அப்படி செய்தால் வார்னரை நீக்கிய போது கிடைத்த பெயர் தற்போதும் கிடைக்கும் என்று டாம் மூடி கருதது கூற, வில்லியம்சனின் தொடக்க வீரர் இடத்தை இளம் விரருக்கு கொடுக்க ஐதராபாத் அணி உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். யான்செனை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஆப்கான் வீரர் ஃபருக்கை புளேயிங் லெவனில் ஐதராபாத் அணி சேர்த்துள்ளது.

தமிழக வீரருக்கு வாய்ப்பு

தமிழக வீரருக்கு வாய்ப்பு

இதனிடையே, மும்பை அணியிலும் 2 அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. தமிழக வீரர் சஞ்சய் யாதவ் மற்றும் லேக் ஸ்பின்னர் மாயங் மார்கண்டே ஆகியோரை மும்பை அணி பிளேயிங் லெவனில் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் ரோகித் 68 ரன்கள் அடித்தால் மும்பை அணிக்காக முதலில் 5 ஆயிரம் ரன்களை அடித்த விரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

ஸ்டப்ஸ் கலக்குவாரா?

ஸ்டப்ஸ் கலக்குவாரா?

இதனால் ரோகித் சர்மா அடிக்க வேண்டும் என 4 அணிகளின் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். ஸ்டப்ஸ் இன்று தென்னாப்பிரிக்க அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இன்று அதனை பேட்டிங்கில் ரன் கவித்து கொண்டாடுவார் என எதிர்பார்க்கலாம். மும்பை அணி இன்று முழுக்க முழுக்க எதிர்காலத்தை கட்டமைக்கும் நோக்கில் அணியை தேர்வு செய்துள்ளதாக சுனில் காஸ்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 17, 2022, 20:12 [IST]
Other articles published on May 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+