
சிஎஸ்கே நிலைமை
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. சரியான ப்ளேயிங் 11 அமையாதது இதற்கு முக்கிய காரணமாகும். தீபக் சஹார் ஒருபுறம் இல்லை, மற்றொருபுறம் டெவோன் கான்வே திருமண விடுமுறையில் உள்ளார். கடந்த சில போட்டிகளாக நட்சத்திர வீரர் மொயீன் அலியும் இல்லாதது பெரும் பின்னடைவாக சென்றது.

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு
ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் குறைந்தது 14 புள்ளிகள் எடுத்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் 16 புள்ளிகள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அந்தவகையில் சென்னை அணிக்கு மீதம் 6 லீக் போட்டிகள் உள்ளன. இதில் அனைத்திலுமே மெகா வெற்றியை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

புது நம்பிக்கை
இந்நிலையில் இதற்கு நம்பிக்கை தரும்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த மொயீன் அலி, இன்று மீண்டும் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். அவரிடம் " இனி பார்ட்னர்ஷிப்காக ஆட வேண்டாம்.. கிடைக்கும் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க வேண்டும் என தோனி கூறியதாக தெரிகிறது. இதனால் முழுக்க முழுக்க அதிரடி பேட்டிங் பயிற்சியை மட்டுமே எடுத்து வருகிறார்.

அடுத்து என்ன போட்டி
சிஎஸ்கேவுக்கு அடுத்ததாக நாளை ஐதராபாத் அணியுடன் போட்டி உள்ளது. இதில் கடைசி ஆயுதமான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அதிரடியான மொயீன் அலி, தோனியின் பழைய வியூகங்கள் என பக்கா ப்ளான்களுடன் களமிறங்கும் எனத்தெரிகிறது. இதற்கான ஆலோசனைக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











