For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் : மொயின் அலி சிஎஸ்கே ரிட்டர்ன்.. சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ..பிளேயிங் லெவனில் என்ன மாற்றம் வரும்?

சென்னை: ஐபிஎல் 15வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் அனுபவ வீரர்களான மொயின் அலி மற்றும் தீபக் சாஹர் இல்லை. இதனால் அணியின் Combination இல் சிக்கல் ஏற்பட்டது.

மொயின் அலிக்கு பதிலாக மிட்செல் சாண்டனும், தீபக் சாஹருக்கு பதிலாக துஸ்பாண்டேவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

வரவேற்பு

வரவேற்பு

இந்த நிலையில், விசா கிடைக்க தாமதமானதால் மொயின் அலியால் முதல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. தற்போது மும்பை வந்த மொயின் அலி 3 நாள் குவாரண்டையினில் இருந்து சிஎஸ்கே அணிக்கு திரும்பினார். சிஎஸ்கே அணியின் ஆலோசனை கூட்டத்துக்கு மொயின் அலி வந்து, சக வீரர்களிடம் கை குலுக்கினார். அப்போது ராபின் உத்தப்பா உள்ளிட்ட மற்ற வீரர்கள் மொயின் அலியை கட்டிப்பிடித்து வரவேற்றனர்.

மொயின் அலி ஃபார்ம்

மொயின் அலி தற்போது செம ஃபார்மில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 5 டி20 தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக அசத்திய மொயின் அலி, பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 போட்டியிலும் கலக்கினார். 38, 30, 22,8,75,46, 6 என வங்கதேச டி20 லீக் போட்டியில் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் 9 விக்கெட்டும் என மொயின் அலி அசத்தி இருக்கிறார்.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

இதனால் மொயின் அலி நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். மொயின் அலி சிஎஸ்கே அணிக்கு திரும்புவதால், அணியின் பிளேயிங் லெவனே தலைக்கீழாக மாறலாம். மொயின் அலி 3வது இடத்தில் பேட்டிங் செய்ய, உத்தப்பா 4வது இடத்துக்கு தள்ளப்படுவார். இதனால் முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற சிவம் துபே, மிட்செல் சாண்டனர் அணியிலிருந்து மாற்றப்படலாம்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ருத்துராஜ் கெய்க்வாட், 2, டிவோன் கான்வே, 3,மொயின் அலி, 4, ராபின் உத்தப்பா, 5, அம்பத்தி ராயுடு, 6, ஜடேஜா 7, தோனி, 8, பிராவோ, 9,ஆடம் மிலின், 10, துஷ்பாண்டே, 11, ஹங்கர்கேகர்

Story first published: Monday, March 28, 2022, 22:01 [IST]
Other articles published on Mar 28, 2022
English summary
IPL 2022- Moeen Ali returns to CSK Training after 3 days of quarantine IPL மொயின் அலி CSK ரிட்டர்ன்.. சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ..பிளேயிங் லெவனில் என்ன மாற்றம் வரும்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+