For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டி நடுவே இதெல்லாம் செய்வதா.. அம்பயரை கடுப்பாக்கிய முகமது ஷமி.. முதல் ஓவரிலேயே பரபரப்பு!

மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி செய்த ஒரு விஷயத்தால் நடுவர்கள் கடுப்பாகியுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபி இன்னிங்ஸ்

ஆர்சிபி இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங் வீரர் டூப்ளசிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி 58 ரன்கள் அடித்து கம்பேக் தந்தார். இவருக்கு உறுதுணையாக நின்ற ராஜத் பட்டிதார் 52 ரன்களை விளாச, 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குவித்தது.

தாமதம் ஏன்

தாமதம் ஏன்

இந்த போட்டியிலும் வழக்கம் போல நடுவர்கள் சம்பந்தபட்ட சர்ச்சை எழுந்தது. அதாவது ஆட்டத்தின் முதல் பந்தை முகமது ஷமி வீச, அது டிஃபண்ட் செய்யப்பட்டது. எனினும், ஷமி ஏதோ தவறாக இருப்பதை போன்றே உணர்ந்தார். சில விநாடிகள், பந்துவீசவே யோசித்தார். பிறகு அவசர அவசரமாக டக் அவுட்டில் இருந்து ஒரு வீரரை அழைத்தார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

களத்திற்குள் வந்த அந்த வீரர், தனது கையில் ஒரு டேப்பையும் எடுத்து வந்து திடீரென பந்துவீசும் தூரத்தை அளந்தார். ஷமிக்கு பவுலிங் தூரம் குறைவாக இருப்பது போன்றும், நோ பால் வீசிவிடுவது போன்றும் தோன்றியுள்ளது. இதனால் அதனை சரிசெய்துக்கொண்டார். இதனால் முதல் ஓவரிலேயே சில நிமிடங்கள் ஆட்டம் பாதிப்பானது.

நடுவர் ஆத்திரம்

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கள நடுவர், ஷமியிடம் உடனடியாக பவுலிங்கை தொடங்குமாறு கூறினார். எனினும், தனது நிலையை அம்பயருக்கு விளக்கி ஷமி நினைத்ததை செய்துவிட்டார். இந்த செயலுக்கான விளைவு போட்டி முடிந்த பிறகு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 30, 2022, 18:37 [IST]
Other articles published on Apr 30, 2022
English summary
RCB vs GT match ( ஆர்சிபி vs குஜராத் அணி போட்டி ) ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி பவுலர் முகமது ஷமி திடீரென செய்த ஒரு விஷயத்தால் நடுவர் கடும் அதிருப்தி அடைந்தார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+