Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் தோனி புதிய சாதனை.. பழைய தல திரும்பிட்டாரு.. சிக்சருடன் தொடங்கி அசத்தல்

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் 7வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்படும் தோனி டி20 கிரிக்கெட்டில் தனக்கு என்றே ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியவர்.

ஆனால் கடந்த 2 சீசனாக தோனி தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

தோனி ஃபார்ம்

தோனி ஃபார்ம்

இந்த நிலையில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவிலியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பயிற்சி முகாமில் தோனி பெரிய ஷாட்களை ஆடி பயிற்சி எடுத்தார். இதனால் இம்முறை தோனி ஒரு காட்டு காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல், கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோனி இக்கட்டான நிலையில் களமிறங்கினார்.

அரைசதம்

அரைசதம்

அதில் தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் அடித்து பேட்டிங்கில் இன்னும் நான் கிங் தான் என்று நிரூபித்தார். இதே போன்று லக்னோ அணிக்கு எதிரான 2வது ஆட்டத்தில் களத்துக்கு வந்த தோனி, ஆவேஷ் கான் வீசிய முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார். அடுத்த பந்தையும் பவண்டரிக்கு விரட்டினார். இதே போன்று ஆட்டத்தின் கடைசி பந்திலும் பவுண்டரி அடித்தார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

6 பந்துகளில் தோனி 16 ரன்கள் அடித்தார். இதன் மூலம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 266 ஆக இருந்தது. இந்த இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை தோனி கடந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார்.

Recommended Video

IPL 2022: Suresh Raina Makes His IPL 2022 Playoffs’ Predictions | Oneindia Tamil
அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இதே போன்று ஐபிஎல் தொடரில் 16 முதல் 20 ஓவரில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இதே போன்று இந்த ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் வைத்துள்ள வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். உங்களுக்கு வயசு ஆனாலும் உங்க பேட்டிங் ஸ்டைல் இன்னும் மாறல என்று தோனி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Thursday, March 31, 2022, 22:00 [IST]
Other articles published on Mar 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+