For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அத எடுத்துட்டு வாங்க”.. முக்கிய பயிற்சியை கையில் எடுத்த தோனி.. மும்பை அணியை சமாளிக்க வியூகம்!

மும்பை அணிக்கு எதிரான போட்டிக்காக சென்னை அணி வித்தியாசமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளான இவை ஏற்கனவே நடப்பு தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.

பழிவாங்குமா மும்பை அணி

பழிவாங்குமா மும்பை அணி

எனினும் இவர்களுக்குள் இருக்கும் கணக்கு இன்னும் தீரவில்லை. லீக் சுற்றில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசி ஓவரில் கேப்டன் தோனி 17 ரன்களை அடித்து தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

 பதற்றத்தில் சிஎஸ்கே

பதற்றத்தில் சிஎஸ்கே

எனவே இன்று அதற்கு மும்பை அணி பதிலடி கொடுக்க காத்துள்ளது. அதுவும் இன்றைய போட்டி மும்பை அணியின் கோட்டையாக பார்க்கப்படும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை நடந்த போட்டிகளின் போது 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருந்துள்ளது. இந்த களத்தில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், பொல்லார்ட் ஆகியோர் சுலபமாக கையாள்வார்கள். ஆனால் சிஎஸ்கே சமாளிப்பது சிரமம்.

ஸ்பெஷல் வகுப்பு

ஸ்பெஷல் வகுப்பு

இதனையடுத்து சென்னை அணியின் வீரர்களுக்கு கேப்டன் தோனி ஸ்பெஷலாக ஈரமான பந்தில் பயிற்சி கொடுத்துள்ளார். பேட்டிங், பவுலிங் என இரண்டிற்குமே இதில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தோனியும் பேட்டிங்கில் அதிரடி சிக்ஸர்களை அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை 19 முறையும் சிஎஸ்கே 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

MI vs CSK MS Dhoni வியூகத்தை கணித்த Rohit என்ன நடந்தது? | OneindiaTamil
ப்ளே ஆஃப் கனவு

ப்ளே ஆஃப் கனவு

மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவுகள் முடிந்துவிட்டாலும், சிஎஸ்கேவுக்கு கணக்குகளின் அடிப்படையில் இன்னும் கொஞ்சம் வாய்ப்புள்ளது. ஆனால் இன்று தோற்றுவிட்டால் அந்த நம்பிக்கையும் உடைந்துவிடும். எனவே குறைந்தது மும்பை அணியை வீழ்த்தி பெருமை பெற சிஎஸ்கே முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, May 12, 2022, 21:35 [IST]
Other articles published on May 12, 2022
English summary
CSK vs MI Match ( சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் போட்டி ) ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்காக சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி ஸ்பெஷல் பயிற்சியை வழங்கி வருகிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+