
மோசமான ஓப்பனிங்
ஓப்பனிங்கிற்கு களமிறங்கிய ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே ஜோடி முதல் ஓவருக்கு கூட தாக்குப்பிடிக்கவில்லை. ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட்டும், டெவோன் கான்வே 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து விகெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இருவருமே உமேஷ் யாதவின் பவுலிங்கில் சிக்கினர்.

மிடில் ஆர்டர் சொதப்பல்
இதன் பின்னர் வந்த உத்தப்பா, அம்பத்தி ராயுடு, நிதானமாக ரன் உயர்த்துவார்கள் என்று பார்த்தால் சிறிது நேரத்திலேயே அவசரப்பட்டு தூக்கி அடிக்க முயன்றனர். இதன் விளைவு உத்தப்பா 28 ரன்களுக்கும், அம்பத்தி ராயுடு 15 ரன்களுக்கும் வெளியேறினர். பின்னர் வந்த ஷிவம் தூபே 3 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது.
இந்த நிலையில், ஆட்டத்தின் 5 புள்ளி 5வது ஓவரில் ஒரு பெரிய ஆச்சரியம் நிகழ்ந்தது. கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை ராயுடு அடிக்க முற்பட்ட போது, அது ஸ்டம்பை பதம் பார்த்தது. ஆனால் ஸ்டம்பில் இருந்த பைல்ஸ் நகரவும் இல்லை, கீழே விழுவும் இல்லை. ஆனால் பந்தோ பவுண்டரிக்கு சென்றது.

சிஎஸ்கே தடுமாற்றம்
இதனால் ராயுடுவுக்கு மேலும் ரன் குவிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ராயுடு 15 ரன்கள் எடுத்த போது தேவையில்லாமல் ரன் அவுட்டாகி, தனது விக்கெட்டை கொல்கத்தா வீரர்களுக்கு பரிசை அளித்தார். அதிரடியாக விளையாடிய உத்தப்பாவும் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க , சிவம் துபேவும் ரசிகர்களை ஏமாற்றினார். இதனால் சென்னை அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Recommended Video

தோனி அதிரடி
இதனையடுத்து பெரும் வரவேற்புக்கு இடையே மைதானத்துக்கு வந்த தோனி, தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினார். அவருக்கு நரைன் நெருக்கடி தர, அப்போது பொருமை காட்டிய தோனி, பின்னர் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 1 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாச தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் தோனி அரைசதம் குவித்தார். ஜடேஜா 26 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications











