Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னை தக்கவைக்க வேண்டாம்” சிஎஸ்கேவுக்கு தோனி அனுப்பிய குறுஞ்செய்தி.. நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

அமீரகம்: அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தன்னை தக்கவைக்க வேண்டாம் என எம்.எஸ்.தோனி, சிஎஸ்கேவிடம் கேட்டுக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Retention செய்ய வேண்டாம் என்ற Dhoni.. Srinivasan சொன்ன தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக 2 அணிகள் இணைக்கப்படவுள்ளன. இதோடு ஐபிஎல் மெகா ஏலமும் நடைபெறவுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணியின் 3- 4 வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்கள்.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

2 புதிய அணிகள் வருவதால், ஏலத்தின் விதிமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். Right to match card முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கலாம் என அணிகள் குழப்பத்தில் உள்ளது. எனினும் தோனியை கண்டிப்பாக தக்கவைப்போம் என சிஎஸ்கே மட்டும் தெளிவான முடிவை அறிவித்தது.

அதிக ஊதியம்

அதிக ஊதியம்

இது ஒருபுறம் இருக்க சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைக்கும் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது ஒரு அணி 4 வீரர்களை தக்கவைக்க விரும்பினால், முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி ஊதியமாக தரவேண்டும். 3 வீரர்களை தக்கவைத்தால் ரூ.15 கோடி தர வேண்டும். ஒன்று அல்லது 2 வீரர்களை தக்கவைத்தால் ரூ.14 கோடி ஊதியம் தரவேண்டும்.

தோனி வேண்டுகோள்

தோனி வேண்டுகோள்

இந்நிலையில் இவ்வளவு அதிக தொகை கொடுத்து தன்னை எடுக்க வேண்டாம் என தோனி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அணி உரிமையாளர் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார். அதில், எம்.எஸ்.தோனி ஒரு நியாயமான மனிதர். அவர் எங்களிடம், அதிக தொகை கொடுத்து தன்னை தக்கவைக்க வேண்டாம். அது சிஎஸ்கேவுக்கு தான் நஷ்டம் எனக்கூறினார்.

திட்டவட்ட முடிவு

திட்டவட்ட முடிவு

ஆனால் நாங்கள் அவரை விடப்போவதில்லை. முன்பே கூறியபடி தோனி இலலாமல் சிஎஸ்கே இல்லை. அவர் தான் எங்களின் முதல் தேர்வு. எனினும் அணியில் தோனியை போன்றே நீண்ட காலம் இருக்கும் வேறு வீரர்களுக்கும் இதே சலுகையை கொடுக்க முடியாது. ஆலோசனைகளில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அவர்கள் மட்டும் தான் தக்கவைக்கப்படுவார்கள். கடினமான முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும் என சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு 40 வயதாகிவிட்டது. அவர் அடுத்தாண்டு தொடர் முதல் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அவரை நம்பி ரூ.16 கோடியை சிஎஸ்கே நிர்வாகம் இழக்க தயாராக இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Story first published: Tuesday, November 2, 2021, 20:11 [IST]
Other articles published on Nov 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+