2000 கருங்கோழிகள் வருகை.. பழங்குடியினர் நலனுக்காக தோனி செய்த விஷயம்.. மற்றொரு முக்கிய காரணம்!!
மும்பை: பீர் வியாபாரத்தை தொடர்ந்து தற்போது கோழி பண்ணை தொழிலும் தோனி கால் பதித்துள்ளார். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே வீரருமான எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் தொடரில் பிசியாக விளையாடி வருகிறார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

பீர் நிறுவனம்
7 இங்க் ப்ரீவ்ஸ் என்ற பீர் நிறுவனத்தில் தன்னை பங்குதாரராக இணைத்துக்கொண்ட தோனி, தூதுவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனத்தில் தயாராகும், காப்டர் 7 என்ற பீர் மும்பை, பெங்களூரு, கோவா மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் அமோகமாக விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் அடுத்த தொழில் ரெடி ஆகிவிட்டது.

கோழி பிசினஸ்
அதாவது 2000 கடக்நாத் கோழிகளை மொத்தமாக வாங்கி வளர்ப்பு பண்ணை தொடங்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கடக்நாத் கோழி, கருங்கோழி, கருங்கால் கோழி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வகை கோழி கிடைப்பது மிகவும் அரிது. இதன் விலையும் அதிகம். இந்தியா முழுவதும் இந்த வகை கோழிக்கு அதிக தட்டுப்பாடு உள்ளது.

2020ம் ஆண்டே ஆர்டர்
தோனி கடந்த 2020ம் ஆண்டே இந்த கோழிகளுக்கு ஆர்டர் கொடுத்து முன்பணம் செலுத்தியிருந்தார். ஆனால் பறவைக்காய்ச்சல் காரணமாக நாட்கள் தள்ளிப்போகி தற்போது தான் கிடைத்துள்ளது. ஒருநாள் வயதுடைய கோழிக்குஞ்சியின் விலை ரூ.75, 15 நாட்களான கோழி ரூ.90, 28 நாட்களான கோழிக்கு ரூ.120 என்ற அடிப்படையில் தோனி வாங்கியுள்ளார். இதன் மூலம் பழங்குடி மக்கள் பெரியளவில் நன்மை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

கோழியின் குணம்
தோனி இத்தனை கருங்கோழிகளை வாங்கியிருப்பதால், அவற்றின் சிறப்பு குறித்து பலரும் தேடி வருகின்றனர். கருங்கோழிகள் சாதாரண நாட்டுக் கோழிகளை விட கொழுப்புகள் குறைவாக கொண்டவை ஆகும். அதிகா புரதச் சத்து நிறைந்தது. அதில் மருத்துவ குணங்களும் இருப்பதால் தான் அதற்கு தேவை அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications