Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா !! இதுனால தான் தோனி ஒரு “மாஸ்டர்”.. சூரத்தில் ஏன் சிஎஸ்கேவின் பயிற்சி முகாம்.. உண்மை இதோ

சென்னை: சிஎஸ்கேவின் பயிற்சி முகாமை சென்னையில் இருந்து சூரத்திற்கு மாற்றியதில் கேப்டன் தோனி மாஸ்டர் மூவ் என தெரியவந்துள்ளது.

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 29ம் தேதி நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, புனே மற்றும் அகமதாபாத் என 3 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெறுகிறது.

சிஎஸ்கே பயிற்சி

சிஎஸ்கே பயிற்சி

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே சென்னையில் பயிற்சி முகாமை தொடங்குவார்கள். அந்தவகையில் இந்த முறையும் 20 நாட்கள் பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சி முகாமை சென்னையில் இருந்து சூரத்திற்கு மாற்றியுள்ளனர்.

தோனியின் முடிவு

தோனியின் முடிவு

மகாராஷ்டிராவில் தான் போட்டிகள் நடைபெறுகிறது என்று தெரிந்த அடுத்த சில நாட்களில் சிஎஸ்கே அவசர அவசரமாக சூரத்தில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் ஸ்டேடியத்தை புக் செய்தது. மேலும் வரும் மார்ச் 2ம் தேதியில் இருந்து தோனி, பிராவோ, உத்தப்பா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கு பெறவுள்ளனர்.

உண்மை காரணம்

உண்மை காரணம்

இந்நிலையில் இதன்பின்னால் உள்ள உண்மை காரணம் தெரியவந்துள்ளது. அதாவது சூரத் மைதானம் புதிதாக கட்டப்பட்ட ஒன்றாகும். இங்குள்ள மண்ணும், மும்பை மைதானங்களில் உள்ள மண்ணும் ஒன்று தான். அதாவது இரு பிட்ச்-களும் சுமார் 80% சதவீதம் ஒத்துப்போகும். இதனால் இங்கு பயிற்சி பெற்றால் மும்பை களங்களை சுலபமாக எதிர்கொள்ளலாம். இது தோனிக்கு நன்கு தெரிந்துள்ளது.

புதுமுககங்களுக்கான ஏற்பாடு

புதுமுககங்களுக்கான ஏற்பாடு

மூத்த வீரர்களுக்கு மும்பை பழக்கப்பட்ட பிட்ச் தான். ஆனால் இளம் வீரர்கள் அங்கு ஐபிஎல் விளையாடியிருக்க மாட்டார்கள். எனவே அவர்களை மனதில் வைத்து, மும்பையில் உள்ள பிட்ச்-களை போன்றே இருக்கும் சூரத் மைதானத்தை பிடித்துள்ளனர். இதன் மூலம் தோனியின் மாஸ்டர் ப்ளானை தெரிந்துக்கொள்ள முடிகிறது.

Recommended Video

IPLக்குள் மீண்டும் Shane Watson! DC Coach ஆக Join ஆகிறார் | OneIndia Tamil
ரசிகர்கள் பார்க்கலாம்

ரசிகர்கள் பார்க்கலாம்

வரும் மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் இந்த பயிற்சி முகாமில் சுமார் 20 வீரர்கள் பங்கேற்பார்கள் எனத்தெரிகிறது. அவர்களின் ஆட்டத்தை காண மைதானத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் உரிய கொரோனா சான்றுதழ்கள் தேவை.

Story first published: Saturday, February 26, 2022, 12:01 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+