Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிவுட்டில் கால் பதிக்கும் தோனி.. கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மும்பை: சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் முடிந்தவுடன் தமிழ் திரையுலகில் கால் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பதவியேற்று ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ் தந்தார்.

கோலிவுட்டில் தல தோனி

கோலிவுட்டில் தல தோனி

இந்நிலையில் ரசிகர்களுக்கு மற்றொரு சர்ஃபரைஸ் கொடுக்க காத்துள்ளார்.

தோனி இந்தாண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு தொழில்களில் முதலீடுகளை செய்து வருகிறார். அந்தவகையில் தமிழ் திரையுலகிலும் கால் பதித்து தனது மார்கெட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இதற்காக தமிழ் திரைப்படம் ஒன்றை தோனி தயாரிக்கவுள்ளார். சென்னையில் தனி குழு ஒன்றை அமைத்துள்ள அவர், ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் தனது திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் தோனிக்கு மிகவும் நெருக்கமான இடம் என்பதால் முதல் படத்தை இங்கு தயாரிக்கிறார்.

கதாநாயகி யார்?

கதாநாயகி யார்?

பெரும் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் தோனியை வைத்து விளம்பர படம் இயக்கியிருந்தார். எனவே விக்னேஷ் சிவன் மூலமாக தான் தோனிக்கு இந்த தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் வந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் கால்ஷீட்

நயன்தாராவின் கால்ஷீட்

நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க தயாராகி வருகிறார். மற்றொரு புறம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளனர். எனவே திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்கப்போகும் படமாக தோனியின் திரைப்படம் இருக்கலாம் எனத்தெரிகிறது.

Story first published: Wednesday, May 11, 2022, 17:34 [IST]
Other articles published on May 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+